ஹிட் ட்ராக்கில் பாசில் ஜோசப்.. ட்விஸ்ட் அண்டு டர்ன்ஸிலும் சிரிப்பலை.. எப்படி இருக்கிறது மரணமாஸ் படம்?
டார்க் காமெடி திரில்லராக உருவான மலையாளப் படம் மரணமாஸ், சோனிலிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. பாசில் ஜோசஃப் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஹிட் ட்ராக்கில் பாசில் ஜோசப்.. ட்விஸ்ட் அண்டு டர்ன்ஸிலும் சிரிப்பலை.. எப்படி இருக்கிறது மரணமாஸ் படம்?
மலையாளத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் பாசில் ஜோசஃப், வெவ்வேறான கான்செப்ட்களுடன் படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் மரணமாஸ், சோனிலிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தொடர் கொலைகாரன் கான்செப்ட்டில் உருவான இந்த டார்க் காமெடி படத்தை மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மரணமாஸ் எப்படி இருக்கிறது?
படத்தின் கதை
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், முதியவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்து வருகிறான் தொடர் கொலைகாரன் ரிப்பர். பிளேடால் முகம் முழுவதும் வெட்டி, வாயில் அரிதாம்பழம் வைத்து கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த தொடர் கொலைகாரனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் அதிகாரி அஜய் ராமச்சந்திரன் ஏற்றுக்கொள்கிறார்.