நான் இன்னமும் அர்னவ் மனைவி தான்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. வைரலாகும் திவ்யாவின் பேச்சு
தனக்கும் அர்னவ்விற்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் இருவரும் தனித்தனியாக வாழ்கிறோம். அவ்வளவு தான் என நடிகை திவ்யா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீரியல் நடிகர் அர்னவ் தன்னுடன் நடித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையும், இதற்காக சொல்லப்பட்ட காரணமும் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது.
பிக்பாஸில் ஸ்கோர் செய்ய நினைத்த அர்னவ்
இந்நிலையில் தான் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பிக்பாஸ், நடிகர் அர்னவ்வை போட்டியாளராக அறிமுகப்படுத்தியது. அவர் மட்டும் சென்றால் அங்கு எந்த சம்பவமும் நடக்காது என்பதற்காக அவரது நெருங்கிய தோழி அன்ஷிதாவையும் மற்றொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தன்னை நிரூபிக்கும் பல முயற்சிகளில் அர்னவ் ஈடுபட்டார். அப்படி இருந்தும் சிறு சிறு செய்கைகள் மூலம் அவரது முகம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு 2வது வாரமே எலிமினேட் செய்யப்பட்டார். போட்டியிலிருந்து வெளியேற அர்னவ் பேசிய வார்த்தைகளுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
வைல்டு கார்டு என்ட்ரி தரும் திவ்யா
இந்த சமயத்தில் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருக்கின்றனர். அவர்களில், அர்னவ்வின் முன்னாள் மனைவி திவ்யாவும் ஒருவர் என பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், இதுகுறித்து திவ்யா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார்.
அவர் என் முன்னாள் கணவர் இல்லை
அதில், பலரும் எனது முன்னாள் கணவர் அர்னவ் என கூறி வருகின்றனர். நான் அதை முதலில் தெளிவுபடுத்த நினைக்கிறேன். எங்கள் இருவருக்கும் சட்டப்பூர்வமாக இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழுந்து வருகிறோம். அவ்வுளவு தான். எனக்கு எல்லாமே என் குடும்பம் தான். சில மாதங்களுக்கு முன் எனது அம்மா உடல்நலமின்றி இறந்துவிட்டார். அதனால், என் அப்பா தான் என் பிள்ளைகள் இருவரையும் பார்த்துக் கொள்கிறார்.
செவ்வந்தி சீரியலில் பிஸி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலின் ஷூட்டிங் பிஸியாக உள்ளது. நான் மிகவும் கடினமான சூழலில் இருந்த சமயத்தில் இந்த சீரியல் புரொடக்ஷன் டீம் எனக்கு மிகவும் சப்போர்ட் ஆக இருந்தனர். எனக்கு ஏற்ற மாதிரி கதைக்களத்தை மாற்றி அமைத்தனர், அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.
தனி ஆளாக கஷ்டப்படுகிறேன்
ஒரு சிங்கிள் மதரா குழந்தைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டம். ஆனாலும் நான் அனைத்தையும் எதிர்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள். இப்போது நான் அவர்களுக்காகவே வாழ்கிறேன். அதுவே எனக்கு சந்தோஷத்தையும் அளிக்கிறது. இந்த உலகத்தில் யாரையும் நம்பாதீர்கள். அதுதான் நான் மக்களுக்கு தரும் பெரிய அட்வைஸ் என தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார் திவ்யா.
பிக்பாஸிற்கு செல்லவில்லை
பின், நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதாக நிறைய செய்திகள் வெளிவருகிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. நான் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு சின்ன குழந்தை உள்ளது. ஷூட்டிங் முடித்து வந்தாலே அவளை நான் மிகவும் மிஸ் செய்வேன். இப்போது அவளைப் பிரிந்து அத்தனை நாள் நான் இருக்க வேண்டும் என நினைக்கக் கூட முடியவலில்லை என்றார். அத்துடன், நீங்கள் அனைவரும் உண்மையின் பக்கம் நிற்கிறீர்கள். பல சமயங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

டாபிக்ஸ்