எல்லா நல்லதுக்கும் ஒரு முடிவு இருக்கு.. மனசிலாயோ.. யாரைச் சொல்கிறார் அர்னவ்வின் முன்னாள் மனைவி?
எல்லா நல்லதும் ஒருநாள் முடிவுக்கு வரும் என சீரியல் நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இவர், அவரது முன்னாள் கணவர் அர்னவ்வை கூறுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீரியல் நடிகர் அர்னவ் தன்னுடன் நடித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையும், இதற்காக சொல்லப்பட்ட காரணமும் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது.
ரஜினி பாடலுடன் அர்னவிற்கு கருத்தா?
இந்த நிலையில், அர்னவ்வின் முன்னாள் மனைவி திவ்யா, அவரது இன்ஸ்டாகிராமில் எல்லா நல்லதும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் வரும் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த மக்கள், அர்னவ் பிக்பாஸ் வீட்டில் தன்னை மிகவும் நல்லவராக காட்டிக் கொள்கிறார். அதைக் குறிப்பிடும் வகையில் இந்த பதிவை அவர் போட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 8
ஆரவாரத்திற்கும் பஞ்சாயத்திற்கும் குறைவே இல்லாத கேம் ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். வெவ்வேறு இடத்தை சேர்ந்த, வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட 18 பேரை ஒரே வீட்டில் அடைத்து வைத்து, ஒன்றாக பயணிக்க வைக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என அறிவித்தவாறே வந்த விஜய் சேதுபதி, நிகழ்ச்சியில், கொடுத்துள்ள டாஸ்குகளும் புதுசாகவே உள்ளது. பிக்பாஸ் வீட்டை ஆண்கள் பக்கம் பெண்கள் பக்கம் எனப் பிரிப்பது, இரு பாலினத்தையும் ஒருவருக்கு ஒருவர் மோத வைப்பது, முதல் 24 மணி நேரத்தில் போட்டியாளர் ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வைப்பது என பார்வையாளர்களுக்கு அனைத்தும் புதிதாக இருந்தது.
முதல் நாமினேட்
அப்போது, முதல் நாளே போட்டியாளர்கள் ஒருவரை நாமினேட் செய்யுமாறு கூறிய போது, அர்னவ், தனது நெருங்கிய தோழியான அன்ஷிதாவை நாமினேட் செய்தார். பின், அவர், அன்ஷிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனாலும் நிறைய வேலைகள் இருக்கிறது. அதனால், அவர் இந்த வீட்டை விட்டு சென்றால் யாருக்கும் பெரிதாக பிரச்சனை இருக்காது என்றார். இதைக் கேட்ட பிக்பாஸ், நீங்கள் அன்ஷிதாவின் நலம் விரும்பியாக பேசாமல், ஒரு சக போட்டியாளராக அன்ஷிதா ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பேசிய அர்னவ் இந்த வீட்டில் நான் 24 மணி நேரம் இருந்துள்ளேன். இங்குள்ள அனைவரும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர், ஆனால், அன்ஷிதா அப்படி இல்லை. இப்போது வரை யாருடனும் கலந்து பேசவில்லை எனத் தோன்றுகிறது. அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். கொஞ்சம் அவர் உத்வேகமாக இல்லாமல் இருக்கிறார். இதனால், நான் அன்ஷிதாவை நாமினேட் செய்ய தேர்ந்தெடுக்கிறேன் என்றார்.
இந்த வீடியோவை பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து அர்னவ்வை திட்டி வருகின்றனர். அர்னவ் மற்றும் அன்ஷிதா நெருக்கமாக பழகியதன் விளைவாக தான், அர்னவ் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது. இதனால், அர்னவ், பாதுகாப்பாக விளையாட நினைத்தே தனது காய்களை நகர்த்தி வருகிறார் என கருத்து தெரிவித்து வந்தனர்.
சாச்சனாவிற்காக கண்ணீர்
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக சாச்சனா சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டு, ரவீந்திரன் விளையாடினர். இதைத் தொடர்ந்து மேலும் சிலர் அதே காரணத்தை சொல்ல அதிகப்பேரால் நாமினேட் செய்யப்பட்டு சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைக் கண்ட அர்னவ், சாச்சனாவிற்காக கண்ணீர் சிந்தி கவலைபட்டுள்ளார்.
சாச்சனா சின்ன பிள்ளை. அவர் எந்த நோக்கத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறினார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில், அவர் கூறிய வார்த்தையை வைத்து விளையாடுவது நன்றாக இல்லை என அன்ஷிதாவிடம் கூறி கவலைபட்டிருப்பார்.
இதையடுத்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை துன்புறுத்தியதுடன், தனக்கு பிறந்த குழந்தையையும் வருடம் ஆகியும் பார்க்காமல் உள்ளார். ஆனால், ஒருநாள் பார்த்த பெண்ணிற்காக அழுது கொண்டிருக்கிறார். இவை எல்லாம் நாடகம். தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள நடத்தும் நாடகம் என நெட்டிசன்கள் அர்னவ்வை திட்டி தீர்த்து வருகின்றனர்.
திவ்யாவின் வைரல் போஸ்ட்
இந்த நிலையில் தான் நடிகை திவ்யா, எல்லா நல்லதும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் வரும் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த மக்கள், அர்னவ் பிக்பாஸ் வீட்டில் தன்னை மிகவும் நல்லவராக காட்டிக் கொள்கிறார். அதைக் குறிப்பிடும் வகையில் இந்த பதிவை அவர் போட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
