தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serial Actor Senthil: ‘புரிதல்ல பிரச்சினை வந்துச்சு; ரொம்ப ரொம்ப மோசமா சண்டை போட்டு’ - சரவணன் மீனாட்சி செந்தில்!

Serial actor Senthil: ‘புரிதல்ல பிரச்சினை வந்துச்சு; ரொம்ப ரொம்ப மோசமா சண்டை போட்டு’ - சரவணன் மீனாட்சி செந்தில்!

Kalyani Pandiyan S HT Tamil
May 31, 2024 05:54 PM IST

Serial actor Senthil: எனக்கு புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. அவளுக்கும் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. இது எல்லா காதல் திருமண வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதுதான். - சரவணன் மீனாட்சி செந்தில்

Serial actor Senthil:  ‘புரிதல்ல பிரச்சினை வந்துச்சு; ரொம்ப ரொம்ப மோசமா சண்டை போட்டு’ -  சரவணன் மீனாட்சி செந்தில்!
Serial actor Senthil: ‘புரிதல்ல பிரச்சினை வந்துச்சு; ரொம்ப ரொம்ப மோசமா சண்டை போட்டு’ - சரவணன் மீனாட்சி செந்தில்!

ட்ரெண்டிங் செய்திகள்

10ம் ஆண்டில் காலடி வைத்த ஜோடி 

அந்த சீரியலில் நடித்து கொண்டே இருந்த போது செந்தில், ஸ்ரீஜா இடையே காதல் மலர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் அண்மையில் தங்களுடைய 10 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக, கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தனர். 

அதில் செந்தில் பேசும் போது, “ எனக்கு புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. அவளுக்கும் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. இது எல்லா காதல் திருமண வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதுதான். கல்யாணத்திற்கு முன்னதாக எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஆனால், கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு இடையேயான புரிதலில் சின்ன குழப்பம் ஏற்பட்டது. 

முதல் மூன்று வருடங்கள்

தற்போது மீண்டும் புரிதல் சரியாகி, எங்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. இப்போது எங்களுடைய மகன் அந்த புரிதலை இன்னும் அதிகமாக மாற்றிவிட்டான். காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாணம் செய்து கொண்ட பின்னரான முதல் 3 வருடங்களை நீங்கள் எப்படியாவது கடந்து விட வேண்டும்.

ஆம், வெளிநாடுகளில் அந்த தருணத்தில் வெட்டிங் ரிங் போடுவார்கள். அந்த மூன்று வருடங்களை நீங்கள் கடந்து விட்டால் உங்களுக்குள் பிரிவு வராது. காரணம் அவரைப்பற்றி உங்களுக்கும், உங்களைப்பற்றி அவருக்கும் இடையேயான புரிதல் ஒரு நிலைக்கு வந்திருக்கும். இது என்னுடைய மனதில் பதிந்து விட்டதால் என்னமோ தெரியவில்லை. வெட்டிங் ரிங் போட்ட பின்னர். எங்களுடைய வாழ்க்கை சுமூகமாக சென்றது.

பொய் சொல்ல விரும்பவில்லை

ஸ்ரீஜா பேசும் போது, “ நான் கேமராவுக்காக வேண்டுமென்றால் பொய் பேசலாம். ஆனால் உண்மையில், எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடந்திருக்கிறது. மோசமாக சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதும் சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். மகன் பிறந்து விட்டதால், இப்போது அதற்கு நேரம் கிடைக்க வில்லை. 

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கெல்லாம் மிகவும் மோசமாக சண்டை போட்டு இருக்கிறோம். ஆனால் அதனை கடந்து மீண்டும் அவருடன் பேச வேண்டும் என்று தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்றே சொல்வேன். காரணம், இந்த உறவுக்குள் இரத்த சம்பந்தம் இல்லை அல்லவா? உங்களது உறவிலும், அந்த மேஜிக் வந்து விட்டால், என்ன ஆனாலும் சரி, அந்த உறவு நம்மை விட்டுப்போகாது.” என்று பேசினார்.

லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்