தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள்.. சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா?
தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள் சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா? - செந்தில்நாதன்!
![தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள்.. சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா? தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள்.. சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா?](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/29/550x309/prabhu_1735438050712_1735438054703.jpg)
சாட்சி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும், அதிலிருந்து அவர் வெளியே வந்தது குறித்தும், இயக்குநர் செந்தில் நாதன் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிக்கத்தெரியாமல் நின்ற விஜயகாந்த்
இது குறித்து அவர் பேசும் போது, ‘ அப்பொழுது விஜயகாந்திற்கு கிட்டத்தட்ட நான்கு படங்கள் தோல்வி அடைந்து இருந்தன. இதனால் அவர் படமே கிடைக்காமல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரூமிலேயே முடங்கி கிடந்தார். இந்த நிலையில்தான் எஸ்ஏ சந்திரசேகர் சார், சாட்சி என்ற படத்தை தொடங்கினார். அதில் விஜயகாந்தை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்.
ஷூட்டிங் வந்த விஜயகாந்திடம் வழக்கம் போல டயலாக் பேப்பரை கொடுத்து, டயலாக்கை சொல்லுங்கள் என்று கூறிய பொழுது, அவரால் பழைய விஜயகாந்தாக மாறி, டயலாக்கை பேச முடியவில்லை. நடிப்பு சுத்தமாக வரவே இல்லை. ஒரு கட்டத்தில் படக்குழுவினர் விஜயகாந்த், இந்தக்கதைக்கு சரியாக வரமாட்டார்; அவருக்கு நடிப்பு வரவில்லை; ஆகையால் அவருக்கு பதிலாக அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த பிரபுவை கதாநாயகனாக போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், விஜயகாந்த் என்னை அழைத்து, செந்தில் என்னை பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். நான் இந்த படத்தில் இருந்து உங்களை நீக்கி விட்டு, வேறு ஒருவரை கதாநாயகனாக நியமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உண்மையை சொல்லிவிட்டேன்.
கெஞ்சிய விஜயகாந்த்
இதைக் கேட்ட விஜயகாந்த் எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வாங்கி கொடுங்கள். நாளை வந்து நடிக்கிறேன். பின்னர் முடிவெடுங்கள். உங்களுக்கு அது நிச்சயமாக பிடிக்கும். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
செந்தில்நாதன் செய்த உதவி
இந்த நிலையில் நான் இதை டைரக்டர் எஸ் ஏ சந்திர சேகரிடம் சென்று… சார் விஜயகாந்த் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு கேட்கிறார். நாம் அதனை அவருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இன்று ஷூட்டிங்கை நாம் தொடங்கியதால், பணம் ஒன்றும் வீணாகப் போவதில்லை. அவர் காட்சிகளை தவிர்த்து வேறு காட்சிகளை நாம் எடுக்கலாம். அதற்கான எல்லா சூழ்நிலையும் தற்போது இருக்கிறது.
ஆகையால் விஜயகாந்த் இப்போது அனுப்பிவிடலாம் என்று கூறினேன். நிலைமையை புரிந்து கொண்ட அவர், அவரை நீ அனுப்பிவிடு; ஆனால் எனக்கு அவர் பழைய விஜயகாந்தாக திரும்பி வருவார் என்று நம்பிக்கை இல்லை என்று சொன்னார். ஆனால் அடுத்த நாள் விஜயகாந்த், பழைய விஜயகாந்த் ஆக வந்தார். டயலாக்கை படித்தார். செட்டில் இருந்த அனைவருமே அப்படி ரசித்தார்கள்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்