தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Senior Journalist Says Vijay Gifts Costly Diamond Neckale To Trisha

Trisha: ஓ அப்படியா கதை..த்ரிஷாவிற்கு லட்சம் ரூபாய் செலவில் வைர நகை வாங்கி கொடுத்த விஜய்

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 12:30 PM IST

த்ரிஷா வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் , அதில் வைர நகை சிக்கியதாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி அளித்திருந்தார்.

விஜய், த்ரிஷா
விஜய், த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷா வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் , அதில் வைர நகை சிக்கியதாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி அளித்திருந்தார்.

அவர் கூறுகையில், “ த்ரிஷா வீட்டில் சோதனை நடத்தியபோது , ​​கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியது. குறிப்பாக அவர் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் வருவாய் துறையினரால் எடுக்கப்பட்டது .

இதற்கான கணக்கு த்ரிஷாவிடம் இல்லை என்பதால் , யார் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை நடிகர் விஜய் தனக்கு பரிசாக கொடுத்ததாக த்ரிஷா” கூறினார்.

நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

விஜய்யும், சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக ஏற்கனவே ஒரு கிசுகிசு இருந்தது. லியோ படத்தில் திரிஷா நடித்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த சர்ச்சை பெரிய பிரச்னையாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், த்ரிஷாவுக்கு, விஜய் மேலும் பல பரிசுகளை வாங்கி கொடுத்து இருக்கிறார் என பத்திரிகையாளர் பாண்டியன் பேசியது வைரலாகி வருகிறது. 

மேலும் லியோ படத்தில் முதல் முறையாக விஜய் - த்ரிஷாவின் லிப் லாக் சீன் காட்சி இடம் பெற்று இருந்தது. அது தான் விஜய், சங்கீதா இடையே பிரிவை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவுப்பும் இல்லை. ஆனால் விஜய் நடிக்கும் படங்களின் விழாவில் வழக்கமாக கலந்து கொள்ளும் சங்கீதா தற்போது கலந்து கொள்ளாததே இந்த சந்தேகதிற்கு வலுவலாக அமைந்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.