Dhanush Health Condition: தனுஷ் உடல்நிலை.. உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா? விளாசும் சேகுவேரா
Dhanush Health Condition: தனுஷிற்கு படப்பிடிப்பின் போது நடந்த உடல்நலக்குறைவால் வெளிநாட்டு மரு்துவமனையில் சிகிச்ச பெற்று வருவதாக வெளியான தகவலுக்கு பத்திரிகையாளர் சேகுவேரா பதிலளித்துள்ளார்.

Dhanush Health Condition: தனுஷ் உடல்நிலை.. உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா? விளாசும் சேகுவேரா
Dhanush Health Condition: நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படப்பிடிப்பின் போது நெருப்பில் நடந்த சண்டைக் காட்சியில் நடித்தார். அப்போது, வெளிவந்த புகை அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியதால் உடல்நிலை சரியில்லாமலே போய் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார். இதனால் இப்போது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் உடல்நிலை குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கிங் உட்ஸ் டிவி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
எல்லாம் கட்டுக்கதை
அந்தப் பேட்டியில், தனுஷ் தனக்கு புகை என்றால் அலர்ஜி என எங்கே சொல்லி இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் தான் டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றால் மற்ற எல்லா படத்திலும் டூப் போட்டு தான் நடித்திருந்தாரா?.