தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Selvaraghavan: ஐயோ.. உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்

Selvaraghavan: ஐயோ.. உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்

Aarthi Balaji HT Tamil
Apr 30, 2024 11:51 AM IST

Selvaraghavan: திரையில் செல்வராகவனுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் தான் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். திடீரென வந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவங்களைத் தூவிவிட்டுச் சென்று விடுவார்.

சானி காயிதம் படத்தில் செல்வராகவன்
சானி காயிதம் படத்தில் செல்வராகவன்

ட்ரெண்டிங் செய்திகள்

தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்த இவர், தனது அற்புத படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக யங்ஸ்டருக்கு மிகவும் பிடித்தமான இயக்குநராக இருந்து வரும் செல்வராகவன் தனது படங்களில் காதலை முற்றிலும் மாறுபட்ட பரிணாமத்தில் காட்டி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது, ஹீரோ ஹீரோயிஸம் செய்வது, நல்லவனாக இருப்பது என்ற அடிப்படை விஷயங்கள் அனைத்து இவரது படங்களிலும் இருந்தாலும் அதை இவர் கையாண்டிருக்கும் விதமானது என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தமிழ் சினிமாவின் இலக்கணம் என்று கூறப்படும் விஷயங்களை இலக்கணத்தி மீறி எதார்த்தமாக காட்டி அதிலும் நியாயத்தை சேர்க்கும் விதமாக இவரது படங்களின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான இவர், அந்த படத்தின் தான் தனுஷை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இந்த படத்தை இயக்கியதும் இவர்தான் என்றாலும், படத்தின் வியாபாரத்துக்காக தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பெயர் படத்தின் இயக்குநராக இடம்பிடித்தது.

திரையில் அவருக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் தான் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். திடீரென வந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவங்களைத் தூவிவிட்டுச் சென்று விடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரு தத்துவ ட்விட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

அதில், “ ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும் ! இந்த நொடி தான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு மீண்டும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை, செல்வராகவனை 2011 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செல்வராகவனுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் இருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருவருக்குள்ளும் ஒரு விதமான ஸ்பார்க் இருக்கும். காலப்போக்கில் அந்த ஸ்பார்க், மேஜிக் உள்ளிட்டவையெல்லாம் அப்படியே கரைந்து விடும் என முன்பு ஒரு முறை பேட்டியில் கீதாஞ்சலி செல்வராகவன் கூறி இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்