Bayilvan ranganathan: கழுத்தில் விழுந்த மாலை.. காந்தமாய் இழுத்த காமம்! - யார் மீது தவறு? -வெளுத்தெடுத்த பயில்வான்!
சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே நடந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்க நாதன் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம்முடைய தமிழர் பண்பாடு. சீமான் விஷயத்தில் விஜயலட்சுமி தரப்பில் இருந்து, மதுரையில் தானும் சீமானும் மாலை மாற்றிக் கொண்டோம் என்றும் தன்னுடைய உழைப்பிலிருந்து பணத்தை சீமானுக்கு தான் கொடுத்தேன் என்றும் சொல்லி இருக்கிறார்.
கல்யாணம் செய்துகொள்ள சொன்ன பொழுது சீமான் தான் பெரியார் வழி வந்தவன் என்று சொன்னதாகவும், மேலும் தான் ஒரு கிறிஸ்துவன் என்றும் கூறியிருக்கிறார். அப்படி சொன்ன சீமான்தான் மதுரைக்குச் சென்று விஜயலட்சுமி உடன் மாலை மாற்றி இருக்கிறார். இதன் பின்னர் விஜயலட்சுமி அனுமதியுடன் அவருடன் உடலுறவு வைத்திருக்கிறார்கள்.
கோயிலில் திருமணத்தை பதிவு செய்வதற்கு சட்ட விதிகள் இருக்கும் பொழுது, வெறும் மாலை மட்டும் விஜயலட்சுமி மாற்றிக் கொண்டது ஏன்? மாலை மாற்றிக் கொண்டால் அது திருமணம் ஆகி விடுமா? நீங்கள் ஏன் சீமானை கல்யாணத்தை பதிவு செய்யவும் அல்லது சர்ச்சில் சென்று கல்யாணம் செய்து கொள்ளவும் வற்புறுத்த வில்லை. அவசரப்பட்டு ஏன் உடலுறவு கொண்டீர்கள்.
இன்னும் சொல்லப்போனால் நிர்வாண வீடியோ எடுக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து சென்று இருக்கிறீர்கள். சீமான் கயல்விழியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே புகாரை கொடுத்திருக்க வேண்டியதுதானே. அதனைத்தொடர்ந்து புகார் கொடுத்து இருக்கிறீர்கள்; ஆனால் அது குறித்தான தொடர் நடவடிக்கை வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு மன நோயாளி போல நடந்து இருக்கிறீர்கள். சீமானின் ஆதரவாளர்களே உங்களை பெங்களூர் அழைத்து சென்று விட்டதாக சொல்கிறீர்கள்.. நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்.. உங்கள் புருஷன் தானே சீமான். நான் ஏன் பெங்களூருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லை
இதனை மீறி சீமான் திருமணம் செய்து கொள்ள முயற்சித்த போது அதை நீங்கள் தடுத்திருக்கலாமல்லவா.. நீங்கள் ஏன் அந்த கல்யாணத்தை நிறுத்தவில்லை
அப்படியானால் உங்களுக்கு போதிய வசதி மற்றும் போதுமான பணம் கொடுக்கப்பட்டதா.. நீங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக இங்கு வந்தீர்கள்; உடம்பு சரி இல்லை என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளீர்கள்.
திடீரென்று மருத்துவமனையை விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் அழுதீர்கள்.. அழுவதை தவிர உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா. எப்போது பார்த்தாலும் பத்திரிகையாளர்களிடம் அழ வேண்டியது இல்லை சண்டை போட வேண்டியது!
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சீமானுக்கு ஆதரவாக இருந்ததாகச் சொல்கிறீர்கள் அந்த நேரத்தில் சீமானுக்கு எதிரான சாட்சியங்களை அவர் அளித்ததாகவும் கூறுகிறீர்கள்.அம்மா இறந்துவிட்டார் என்பதற்காக இப்படியெல்லாம் போய் சொல்வீர்கள்..
இந்த விஷயத்தில் சீமான் தரப்பில் 40 சதவீதம் அளவிற்கு தவறு இருந்தால், உங்களது தரப்பில் 60% அளவிற்கு தவறு இருக்கிறது.” என்று பேசினார்.
நன்றி பயில்வான் ரங்கநாதன்!

டாபிக்ஸ்