தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Seeman Condolence For Ramdoss Dies

RIP E.Ramdoss: நடிகர் ராமதாஸ் மறைவு -பெரும் வேதனையுற்றேன்.. சீமான் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Jan 24, 2023 02:25 PM IST

நடிகர் ராமதாஸ் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீமான் இரங்கல்
சீமான் இரங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கி சட்டை, விசாரணை, யுத்தம் செய், தர்மதுரை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.

பிரபல இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த E.ராமதாஸ், பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத் தம்பியிடமும் பணிபுரிந்திருக்கிறார். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு இயக்குநராக பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்.

முதல் படமே ஹிட்டடிக்க அடுத்து ராஜா ராஜாதான் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ராமராஜன், கெளதமி முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான சுயம்வரம் படத்திலும் ஒரு பகுதியை இவர் இயக்கியுள்ளார்.

பொன் விலக்கு, ராஜாளி, தினமும் என்னை கவனி, இனி எல்லாம் சுகமே உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்த E.ராமதாஸின் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பதிவில், "தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் பல ஹிட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமான E.ராமதாஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு ராமதாஸ் உயிரிழந்தார்.

அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கி சட்டை, விசாரணை, யுத்தம் செய், தர்மதுரை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.

பிரபல இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த E.ராமதாஸ், பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத் தம்பியிடமும் பணிபுரிந்திருக்கிறார். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு இயக்குநராக பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்.

முதல் படமே ஹிட்டடிக்க அடுத்து ராஜா ராஜாதான் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ராமராஜன், கெளதமி முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான சுயம்வரம் படத்திலும் ஒரு பகுதியை இவர் இயக்கியுள்ளார்.

பொன் விலக்கு, ராஜாளி, தினமும் என்னை கவனி, இனி எல்லாம் சுகமே உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்த E.ராமதாஸின் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பதிவில், "தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.

|#+|

அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்பு அண்ணன் ராமதாஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்