தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Seeman Bharathi Raja Speak About Vetrimaaran Viduthalai

Seeman: ‘இந்தியாவிலேயே யாரும் கிடையாது’.. தாடி பிடித்து புகழ்ந்த சீமான்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 31, 2023 05:43 PM IST

விடுதலை படத்தை பார்த்த சீமான் வெற்றிமாறனை புகழ்ந்து பேசினார்

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் பார்த்து இருக்கின்றனர். 

படத்தை பார்த்து முடித்த உடன் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, “ விடுதலை என்ற தலைப்பை அவ்வளவு எளிதாக கடந்து சென்று விட முடியாது. இந்த தலைமுறையின் தலைச்சிறந்த படைப்பாளி வெற்றி. அதை அவர் பலமுறை நிரூபித்து இருக்கிறார். 500 கோடி, 600 கோடி என்று போட்டு நாம் படம் எடுக்கவில்லை என்றாலும் அதற்கு இணையான படைப்பை நம்மால் கொடுக்க முடியும். 

இதை வெறும் திரைக்கதை என்று சொல்ல முடியாது. பன்னெடும் காலமாக தமிழ் சமூக மக்கள் தூக்கி வருகிற கனத்த உணர்வு இது. படத்தை பார்க்கும் பலருக்கும் இப்படி உழைத்து ஒரு படத்தை எடுக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றும். அந்த கடுமையான உழைப்பு வெற்றி மாறனுடையது. 

இது வரலாற்று பெரும் படைப்பு. சூரி படிநிலை பாய்ச்சலாக பாய்ந்து விட்டான்.  8 நிமிடம் ஓடக்கூடிய காட்சி ஒன்றை வெற்றி ஒரே டேக்கில் எடுத்து இருக்கிறான். அதற்கு இந்தியாவிலேயே இயக்குநர் வெற்றிமாறனை விட்டால் ஆள் கிடையாது” என்று சீமான் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜாவும் வந்து வெற்றிமாறனை வாழ்த்தினார். அப்போது சீமான் வெற்றியின் தாடியை பிடித்து தயவு செய்து தாடியை ட்ரிம் செய் என்று சொல்ல,குறுக்கிட்ட பாரதிராஜா எதையும் ட்ரிம் செய்ய வேண்டாம். அது உன்னுடைய அடையாளம்” என்று சொன்னார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்