ரஜினி சந்திப்பு.. நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படம்.. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார்? - சீமான் விளாசல்
ரஜினி சந்திப்பு.. நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படம்.. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார் என சீமான் சரமாரியாகப்பேசியுள்ளார்.
ரஜினியை சந்தித்ததால் நான் சங்கி என்றால் அவரை வைத்து படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்கள் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’இந்த தேர்தலில் வென்று வந்த இலங்கை அதிபர் அனுர திசநாயக்க அறிவிச்சிருக்கார், நீங்கள் சுதந்திரமாக உங்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி அழலாம். இவ்வளவு காலம் போராடி, 50 ஆயிரம் மாவீரர்கள் உயிர் ஈகம் செய்து, பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வீரம் செறிந்த விடுதலைக்கான போரை செய்த நாம் பெற்ற சுதந்திரம், என் அன்புச் சொந்தங்களே, சுதந்திரமாக அழலாம் என்பது தான்.
இந்தத் துயரைத் துடைக்க மானத்தமிழ்ப் பிள்ளைகள் எழவேண்டும் என்பதை இதயச்சுவற்றில் எழுதி வைக்கணும்.
இத்தனை கொடி இருக்கும்போது தலைவன் ஏனடா புலிக்கொடியைத்தூக்கினான். நம் பரம்பரை கொடியைப் பாருங்க, நம் பாட்டன் பாண்டியன் கொடியில் மீன் பாய்ச்சலில் இருக்கும். சேரப்பாட்டனின் கொடியில் பார் வில் அம்பு பாய்ச்சலில் இருக்கும். சோழப்பாட்டானின் பாய்ச்சலில் பார் புலி பாயும். மூவேந்தர்களின் கொடியில் பாய்ச்சல் இருக்கும். அந்தக்கொடியையே நம் தமிழ்த்தேசியத்தின் பிள்ளைள் ஏந்திப் பிடிப்போம்.
காவி Not Fit for Myself - சீமான்
என்னைக் காவியைப் போட்டு சங்கி ஆக்கப்பார்க்கிற. நீ என்ன உடைபோட்டாலும் எனக்கு நன்றாக இருக்கும். காவி Not Fit for Myself.Its Very Bad. Very Ugly. I hate it. ஏன்டா டேய். யாருக்கு. எதையாவது பேசிட்டு அலைஞ்சிட்டுப் போங்கடா. அப்புறம் எதுக்கு என் சின்னத்தை எடுத்துக்கிட்டு, என்னை ரெய்டு விடுறான். எல்லா வெறியையும் அடக்கிட்டு நிக்கவேண்டியிருக்கு. ஏன் என்றால் நாள் அப்படி. அவன் நமக்கு மேக்கப் பண்ணமாட்டான். இதில் பேக்கப் பண்றானாம். நானும் என் தலைவனும் பேசியது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். எங்களைச் சுற்றி பாதுகாப்புக்கு நின்ற சில போராளிகளுக்குத் தெரியும். ரொம்ப நெருக்கமான தளபதிகளுக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்தது என அவனா ஒரு யூகத்தில் பேசுவான். இப்போது நானும் ஐயா ரஜினிகாந்தும் 2.15 மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதைச் சொல்லவேண்டிய அவசியம் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. நாங்க ரெண்டு பேரும் பேசினதில் சங்கி ஆகிட்டோம் என்றால், அவரை வைச்சு வருஷத்துக்கு இரண்டு படம் எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கிற நீங்கள் யார். உங்களுக்குப் பெயர் என்ன. உங்கள் வீட்டில் காதுகுத்தா, கல்யாணமா, புத்தக வெளியிடணுமா, பாட்டு வெளியிடணுமா, எல்லாத்துக்கும் அவரைக் கூப்பிட்டு கூட வைச்சுக்கணும்.
நான் அரசியல் சூப்பர் ஸ்டார் என சொன்ன சீமான்
ஒரு தடவை தான் அவரும் நானும் சந்தித்தோம். உடனே அய்யோ, அய்யோ, அய்யோ.. ஏன் தெரியுமா.. அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துட்டான். எழுது.. எழுது.. என்னைப்பற்றி எழுத என்னையிருக்கு. லட்சக்கணக்கான யூனிட் ரத்தம் கொடுத்திருக்கேன். எழுதுவியா. பல ஆயிரம் பனை விதைகளை விதைச்சிருக்கேன். எழுதுவியா. எழுதமாட்டா. மக்களின் பிரச்னைக்கு மக்களோடு மக்களாக நின்று போராடி தடுத்து இருக்கேன். நான் இல்லையென்றால் எட்டுவழிச்சாலை வந்திருக்கும். நான் இல்லையென்றால், பரந்தூரில் விண்ணூர்தி நிலையம் கட்டிருவான். நான் இல்லையென்றால், காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்டிருவான்.
ஆனால், சரியான ஆண் மக்களா நான் இருக்கும்வரை, என் படை இருக்கும் வரை கட்டிடுறா பார்க்கலாம். வாய்ப்பு இல்லை ராஜா.. ப்ரோ. Its Very Wrong Bro.ஒன்னும் பண்ணமுடியாது’’ என சீமான் பேசினார்.
டாபிக்ஸ்