Alia Bhatt- Ranbir Kapoor: 'ஆலியா பட் கல்யாணத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம்.. ரொம்ப திணறிட்டோம்..'- யூசுப் இப்ராஹிம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Alia Bhatt- Ranbir Kapoor: 'ஆலியா பட் கல்யாணத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம்.. ரொம்ப திணறிட்டோம்..'- யூசுப் இப்ராஹிம்

Alia Bhatt- Ranbir Kapoor: 'ஆலியா பட் கல்யாணத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம்.. ரொம்ப திணறிட்டோம்..'- யூசுப் இப்ராஹிம்

Malavica Natarajan HT Tamil
Jan 11, 2025 03:43 PM IST

Alia Bhatt- Ranbir Kapoor: ஆலியா பட் திருமணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மிகவும் கஷ்டப்பட்டதாக செக்யூரிட்டி கன்சல்டென்ட் யூசுப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Alia Bhatt- Ranbir Kapoor: 'ஆலியா பட் கல்யாணத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம்.. ரொம்ப திணறிட்டோம்..'- யூசுப் இப்ராஹிம்
Alia Bhatt- Ranbir Kapoor: 'ஆலியா பட் கல்யாணத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம்.. ரொம்ப திணறிட்டோம்..'- யூசுப் இப்ராஹிம்

யூசுப் இப்ராஹிம், இவர் கொடுத்த திருமண பாதுகாப்பிலேயே மிகவும் சவாலாக அமைந்தது ஆலியா பட்- ரன்பீர் கபூரின் திருமணம் தான் என கூறியிருக்கிறார். இவர் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

சவாலான வேலை

சமீபத்தில், யூசுப் இப்ராஹிம், சித்தார்த் கண்ணனுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு ஆலோசகர் யூசுப், ஆலியாவின் திருமணத்திற்கு பாதுகாப்பு அளித்து பற்றி நினைவு கூர்ந்தாார். மேலும் அவர்களது கல்யாணம் ஒரு சவாலான பணியாகக் குறிப்பிட்டார். ஆலியாவின் திருமண இடத்திற்கு வெளியே 350க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

கார்களுக்கு பின்னால் ஓடினோம்

மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் கையாண்ட மிகவும் கடினமான திருமணம் என்றால் ஆலியா பட்டின் திருமணம்தான். ஊடகத்தினர் குறைந்தது 350 பேர் இருந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் ஆலியாவின் ரசிகர்களும் வீட்டிற்கு வெளியே கூடியிருந்தனர். இதனால், பாலி ஹில் முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தனர்.

கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், அவர்களின் அபார்ட்மெண்டிற்குச் செல்லும் சாலையில் இருந்து விருந்தினர்களின் கார்களை நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. கார்களுக்குப் பின்னால் ஓட வேண்டியிருந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பலர் பிரபலங்கள் என்பதால் எஹ்களுக்கு அது இன்னும் சவாலானதாக மாறியது. இதனால் அபார்ட்மெண்டில் வசிக்கும் மக்கள் கூட மிகவும் சிரமப்பட்டனர். இதனால் எங்கள் மீதும் எரிச்சலடைந்தனர்.

மிகவும் கஷ்டப்பட்டேன்

ஆலியா பட் திருமணத்தில் 60 பேர் சுழற்சி முறையில் பணியாற்றினோம். ஒவ்வொரு ஷிஃப்டிலும் சுமார் 60 பேர் எட்டு மணி நேரம் பாதுகாப்பை கொடுத்தனர். நாங்கள் 24 மணி நேரமும் வேலை செய்தோம். அபார்ட்மெண்ட்டிற்கு உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாசல். இதனால் பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.

என் பாதுகாப்பாளர்களில் பாதி பேர் சீருடையிலும் மீதமுள்ளவர்களை சிவில் உடையிலும் இருந்தனர், அதனால் அங்கு நடக்கும் எல்லா விஷயத்தையும் எங்களால் மக்களுடன் மக்களாக இருந்து கவனிக்க முடிந்தது. அதனால் தான் ஊடகங்கள் சுவரில் ஏறத் திட்டமிட்டதைக் கூட எங்களால் தடுக்க முடிந்தது என்றார்.

பாலிவுட்டில் ஆலியா

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா பட். யே ஜவானி ஹை தீவானி படத்திற்குப் பிறகு ரன்பீர் கபூருடன் இணைந்து பணியாற்றியத் தொடங்கினார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்த போது அவர்களுக்குள் காதல் மலரத் தொடங்கியது. இதையடுத்து அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யவும் திட்டமிட்டனர்.

ஆலியா- ரன்பீர் காதல் கதை

பின் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள அவர்களது வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில், பாலிவுட்டைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் ரஹா கபூர் என்ற மகளுக்கு பெற்றோர்களானார்கள். திருமணத்திற்குப் பிறகு, ஆலியா மற்றும் ரன்பீர் எண்ணற்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.