Genie Movie Second Look: அழகுப் பதுமையாக நிற்கும் 3 நாயகிகள்.. பூதமாக நின்ற ஜெயம் ரவி; வெளியான ஜீனி செகண்ட் லுக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Genie Movie Second Look: அழகுப் பதுமையாக நிற்கும் 3 நாயகிகள்.. பூதமாக நின்ற ஜெயம் ரவி; வெளியான ஜீனி செகண்ட் லுக்

Genie Movie Second Look: அழகுப் பதுமையாக நிற்கும் 3 நாயகிகள்.. பூதமாக நின்ற ஜெயம் ரவி; வெளியான ஜீனி செகண்ட் லுக்

Marimuthu M HT Tamil
Mar 25, 2024 09:50 PM IST

Genie Movie: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் செகண்ட் லுக் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி
ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், நடிகர் ஜெயம் ரவி. தமிழில் ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் நடிகர் ஆனவர். அதன்பின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ்,மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், சகலா கலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 வரை பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். இவரது பல படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ரகத்தினைச் சார்ந்தவை. ஜெயம் ரவி படப் பாடல்கள் என்று, ஒரு போல்டர் போட்டு கணினியில் சேவ் செய்யும் அளவுக்கு ஒவ்வொன்றும் அலாதியானது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன் ஆகியப் படங்கள் சரியான வரவேற்பினைப் பெறவில்லை. இந்நிலையில் கோமாளி படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஜெயம் ரவியை வைத்து மீண்டும் ஜீனி என்னும் படத்தைத் தயாரிக்கிறது.  

அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த செகண்ட் லுக் போஸ்டரில் ஜெயம் ரவி, தனது நீண்ட தலைமுடியை கொண்டையாகப் போட்டு இருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள சங்கிலிகள் அவிழ்க்கப்படும்போது, அவர் ஒரு மாய விளக்கிலிருந்து வெளியே வரும் பூதம்போல் காட்சியளிக்கிறார். மேலும் அவருடன் வாமிகா கபி ஏஞ்சல் போல் தோற்றமளிக்கிறார். தவிர, கீர்த்தி ஷெட்டி ஒரு பக்கமும், கல்யாணி பிரியதர்ஷன் மற்றொரு பக்கமும், தேவயானி இன்னொரு பக்கமும் காட்சியளித்தார். 

 இதுதொடர்பாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அளித்துள்ள குறிப்பில், ‘’திரையரங்குகளில் முழுமையான ஃபேன்டஸி என்டர்டெயினரின் மாயாஜாலத்தைக் காண தயாராகுங்கள்'’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜீனி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், இது ஒரு அற்புதமான பேண்டஸி படம் என்று தெரிவித்தனர். 

அதில் ஒரு ரசிகர், இது சிறந்த செகண்ட் லுக் என்றும், ஆல் தி வெரி வெரி பெஸ்ட் அண்ணா என்றும் எழுதியிருந்தார். மற்றொருவர் படம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதனைச்  சுட்டிக்காட்டி, "உங்களது இலக்கு பார்வையாளர்கள் குழந்தைகள் தான். வாழ்த்துகள் சார்" என்று எழுதியிருந்தார். 

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தை தற்போது தயாரிப்பில் வைத்துள்ளார். இந்த ஆண்டு, இப்படம் மே மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் தக் லைஃப் மட்டுமின்றி தமிழில் வெளியான 'பிரதர்' படத்திற்கும் ஜெயம் ரவி ஓகே சொல்லிவிட்டார். சமீபத்தில், மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிவிட்டதாக வதந்திகள் வந்தன.

துல்கர் சல்மானும் விலகியதாக செய்திகள் பரவின. ஆனால், ஜெயம் ரவி பற்றியும் துல்கர் சல்மான் பற்றியும், தக் லைஃப் படக்குழு இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.