'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா
நயன்தாராவின் நாக்கில் சனி இருக்கிறது. அதனால் தான் என்ன பேசினாலும் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு பாம்பு தோஷமும் உள்ளது என பாடகி சுசித்ரா விமர்சித்துள்ளார்.

நயன்தாராவின் சமீபத்திய நேர்காணல் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், பாடகி சுசித்ரா நயன்தாராவின் நடவடிக்கைகள் குறித்து பிஹைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், "நயன்தாரா கடந்த 10 வருஷமா பாலிவுட்டில் நுழைய நிறைய முயற்சி பண்ணிருக்கலாம். இல்லை ஹாலிவுட்டில் கூட நுழைய முயற்சி பண்ணிருக்கலாம். பல தொழிலதிபர்களை கல்யாணம் பண்ணிக்க கூட முயற்சி பண்ணிருக்கலாம்.
நாக்குல சனி
இந்த விஷயம் எதுவுமே நடக்காததுனால தான் இவங்க விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணிருக்காங்க. அந்த டாக்குமெண்ட்ரில கூட நயன்தாரா பேசுனது அப்டி தான் இருந்தது. நயன்தாராவுக்கு நாக்குல சனி இருக்கு. அவங்க பொய் சொன்னாலும் ஏதாவது ஒரு இடத்துல மாட்டிக்குறாங்க. அவங்க ஜாதகத்த பாத்தா தெரிஞ்சிடும். இவங்களுக்கு சர்வ தோஷம் இருக்கலாம். இப்போ அது தலைவிரிச்சு ஆடுது.