Karthikai Deepam: சிதம்பரத்துக்கு செக்மேட் வைத்த கார்த்தி.. கார்த்திகை தீபம் சனி, ஞாயிறு தின எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthikai Deepam: சிதம்பரத்துக்கு செக்மேட் வைத்த கார்த்தி.. கார்த்திகை தீபம் சனி, ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Karthikai Deepam: சிதம்பரத்துக்கு செக்மேட் வைத்த கார்த்தி.. கார்த்திகை தீபம் சனி, ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Marimuthu M HT Tamil
Dec 23, 2023 02:14 PM IST

கார்த்திகை தீபம் சீரியலின் முக்கிய எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

அதாவது, கார்த்திக் பல்லவி பாடிய பாடலை யூ- ட்யூபில் ரிலீஸ் செய்கிறான். அந்தப் பாடல் படு வைரலாகி செம ட்ரெண்டிங்காகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ஒரு வழியாக, சிதம்பரத்துக்கு சவால் விட்டபடி பாடலை ரிலீஸ் செய்தாகி விட்டது என கார்த்தியும் சந்தோஷப்படுகிறான். அதனைத்தொடர்ந்து அபிராமி வீட்டிலும் பாடல் ஹிட்டாகி விட்ட விஷயத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். பல்லவியின் பாடல் வெளியான விஷயத்தை அறியும் சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார். மேலும், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து ‘’ஒண்ணுமே நடக்கலைனு சொன்னாய்.. இப்போது என்னாயிற்று? எப்படி அந்த பல்லவி வந்து பாடினா? சொன்ன மாதிரியே பாட்டை ரிலீஸ் பண்ணிட்டான். உன்னை போய் நம்புனேன் பாரு’’ என திட்டி தீர்க்க ஐஸ்வர்யா எனக்கும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று புலம்புகிறாள்.

அடுத்ததாக கார்த்திக் யூ-ட்யூபில் வரும் வியூஸ், லைக்ஸ், கமெண்ட் ஆகியவற்றைப் படித்து பார்த்து, சந்தோசப்படுகிறார். அப்போது, அபிராமி ‘அந்த பல்லவியை வீட்டிற்கு கூட்டிட்டு வா.. கிப்ட் கொடுக்கணும்’ என்று சொல்கிறாள். பிறகு தீபா வர, கார்த்திக் அவளிடம் பல்லவி பற்றி பெருமையாகப் பேசி சந்தோசப்படுகிறான்.

அடுத்ததாக கார்த்திக் மீனாட்சியிடம் வந்து பல்லவி எப்படி வந்தாங்க? அவங்க முகத்தை பார்த்தீங்களா?என்றுகேட்க, மீனாட்சி 'பார்க்கல’ என்று சமாளிக்கிறாள்.

அதன்பிறகு அம்மா, 'அவங்களுக்கு கிப்ட் கொடுக்கணும்னு சொன்னாங்க; நீங்க போன் பண்ணி வரச்சொல்லுங்க’ எனவும் சொல்லி செல்ல மீனாட்சி என்ன செய்வது என்று யோசிக்கிறாள். 

மறுபக்கம் அபிராமி, தீபாவை பிடித்து பல்லவியை பெருமையாகப் பேசி திட்டி அனுப்புகிறாள். இதனைத் தொடர்ந்து மீனாட்சி, ‘தீபாவிடம் அபிராமி கிப்ட் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி பல்லவியை வரச் சொன்ன விஷயத்தை சொல்ல தீபா, ’நான் போக மாட்டேன்’ எனப் பயப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறிய அறியும் எபிசோடுகள் தான்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ளன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.