தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sathyaraj On Pm Modi Biopic: பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறேனா? ஆதாரமற்ற செய்திகள் பிறப்பிடம்..! சத்யராஜ் பதில்

Sathyaraj on PM Modi Biopic: பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறேனா? ஆதாரமற்ற செய்திகள் பிறப்பிடம்..! சத்யராஜ் பதில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 22, 2024 09:58 AM IST

Sathyaraj on PM Modi Biopic: நரேந்திர மோடி பயோபிக்கில் நடிக்க இருப்பதாக உலா வரும் தகவலுக்கு நடிகர் சத்யராஜ் பதில் அளித்துள்ளார். ஆதாரமற்ற செய்திகள் பிறப்பிடம் ஆக சமூக வலைத்தளங்கள் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறேனா? சத்யராஜ் பதில்
பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறேனா? சத்யராஜ் பதில்

ட்ரெண்டிங் செய்திகள்

பாகுபலி படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம், இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்பட பிற மொழி படங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார்.

பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் சத்யராஜ்

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கும் புதிய படமொன்றில் நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இதைத்தொடர்ந்து அதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபல யூடியூப் சேனலான மனினம்பலத்துடனான உரையாடலில் நடிகர் சத்யராஜ், "பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருப்பதாக உலா வரும் தகவல் உண்மையில்லை. அந்த படத்தில் நடிப்பது தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் ஒரு பெரியாரிஸ்ட். இது போன்ற கதாபாத்திரங்களில்  எப்படி நடிப்பேன். 

கனா படத்தில் நடித்தபோது லண்டனில் மெழுகு சிலை வைத்திருப்பதாக சொன்னார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை இப்போது நான் மோடி படத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள்

இது சமூக வலைத்தளங்களில் சிலரால் பரப்பப்பட்ட வதந்திதான். அர்த்தமற்ற, ஆதாரமற்ற செய்திகள் பிறப்பிடமாக சமூக வலைத்தளங்கள் இருந்து வருகின்றன." என்றார்.

ரசிகர்கள் மத்தியில் ஷாக்

முன்னதாக, சத்யராஜ் பிரதமர் மோடி வேடத்தில் நடிக்க இருப்பதாக உலா வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. பெரியாரின் தீவிர ஆதரவாளராக இருந்து வருவதோடு,  அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் எப்படி மோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும், விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. 

ஆனால் சத்யராஜ் தரப்பில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த விளக்கத்தின் மூலம் கடந்த சில நாள்களாக இருந்து வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெப்பன் ரிலீசை எதிர்நோக்கும் சத்யராஜ்

சத்யராஜ் நடித்திருக்கும் புதிய படமான வெப்பன் மே 23ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சத்யராஜ் சூப்பர் ஹூயூமனாக நடித்துள்ளார். இயக்குநர் ராஜீவ் மேனன், வசந்த் ரவி, தன்யா ஹோப், மாய கிருஷ்ணன், யாஷிகா ஆனந்த், கனிகா, வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கன் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

மோடி பயோபிக்கில் விவேக் ஓபராய்

பிரதமர் மோடி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிஎம் நரேந்திர மோடி என்ற படம் 2019இல் வெளியானது. ஓமங்குமார் இயக்கிய இந்த படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் மோடி பயோபிக் குறித்த வதந்தி தீயாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்