Actor Sasikumar: சுப்ரமணியபுரம் படத்துக்கு அடுத்து மீண்டும் அதே போன்ற கதையில் சசிக்குமார்
உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட த்ரில்லர் படத்தில் நடித்து நடித்து வருகிறார் சசிக்குமார்.
1980களில் பின்னணியாக கொண்ட கேங்கஸ்டர் படமாக சுப்ரமணியபுரம் வெளியாகி தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகராக அறிமுகமானார் சசிக்குமார்.
இந்தப் படத்துக்கு பிறகு ஈசன் என்ற படத்தை இயக்கிய சசிக்குமார், தொடர்ந்து படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையடுத்து கழுகு படப்புகழ் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார் சசிக்குமார். த்ரில்லர் படமாக 90களில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சுப்ரமணியபுரம் படத்துக்கு பின்னர் சசிக்குமார் மீண்டும் பீரியட் படமொன்றில் நடிக்கவுள்ளார். படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ஜெய் பீம் புகழ் லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருகிறாராம். பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார்.
சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்பட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இதன் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - உதயகுமார். படத்தொகுப்பு - ஸ்ரீகாந்த் என்பி.
சசிக்குமார் இதுவை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் படத்தில் தோன்றுவார் என படக்குழு தெரிவித்துள்ளது. சுப்ரமணியபுரம் படத்துக்கு பின்னர் குடும்பம் கலந்து ஆக்ஷன் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார் சசிக்குமார். இதையடுத்து அதே பாணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சசிக்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான அயோத்தி நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிசிலும் ஓரளவு வசூலை அள்ளியது. சத்ய சிவா படத்துடன் இணைந்து மேலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சசிக்குமார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்