This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
This Week Tv Programs: வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெர்பாமன்ஸ் ரவுண்ட் ஒளிபரப்பானது.

This Week Tv Programs: களைகட்ட காத்திருக்கும் மேடைகள்.. ஜீ தமிழில் இந்த வாரம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ போன்றவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: ‘நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெர்பாமன்ஸ் ரவுண்ட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பாடலுக்கு ஏற்ப மாறுவேடம் அணிந்து பாடி அசத்தினார்கள்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் திருவிழா சுற்று ஒளிபரப்பாக உள்ளது. திருவிழா காலங்களில் களைகட்டும் பாடல்களை தேர்வு செய்து போட்டியாளர்கள் பாடி அசத்த உள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதே போல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ, டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் சீசன் 3. இந்த நிகழ்ச்சியை விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.
மார்ச் 1-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் இன்ட்ரோ சுற்று ஒளிபரப்பானதை தொடர்ந்து, இந்த வாரம் ரி-கிரியேஷன் ரவுண்ட் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது, சூப்பர் ஹிட்டான பாடல்களை தேர்வு செய்து, அதே ஸ்டெப், அதே கெட்டப்பில் நடனமாடி அசத்த உள்ளனர். மேலும், இந்த வாரம் முதல் போட்டியாளர்களுக்கு இடையேயான மோதலும் தொடங்குகிறது. இதனால் ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என இரண்டு ரியாலிட்டி ஷோக்களும் சூப்பர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்