SAREGAMAPA: SPB-ஐ கொண்டாடும் சரிகமப.. செகண்ட் பைனலிஸ்ட்டாக போவது யார்? இந்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
SAREGAMAPA: எஸ். பி. பாலசுப்பிரமணியம் சரண் பங்கேற்க உள்ளார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர்.

SAREGAMAPA: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்கள்
கடந்த வாரம் நடந்து முடிந்த ஹீரோ ஹீரோயின்ஸ் ரவுண்ட் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ரவுண்டின் இறுதியில் முதல் பைனலிஸ்ட்டாக தேர்வாகினார் மகிழன். இதனை தொடர்ந்து இந்த வாரம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்களை கொண்டாடும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ரவுண்ட் நடைபெற உள்ளது.
இந்த ரவுண்டில் சிறப்பு விருந்தினராக எஸ். பி. பாலசுப்பிரமணியம் சரண் பங்கேற்க உள்ளார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.