Senthil sreeja: ‘குழந்தை இல்லன்னு அவ்வளவு அழுத்தம்.. சுத்தி இருக்குறவங்க வருத்தப்பட்டு’ - செந்தில் ஸ்ரீஜா பேட்டி!
Senthil sreeja: இவளுக்கு தேவ் பிறப்பதற்கு முன்னதாக இரண்டு மூன்று தடவை கரு உண்டாகி கலைந்து விட்டது. அது அனைத்துமே மிகவும் கஷ்டமான தருணங்கள். இரண்டு பேருமே குழந்தையை அப்படி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம் - செந்தில் ஸ்ரீஜா பேட்டி
Senthil sreeja: ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்கள் ஸ்ரீஜா, செந்தில் ஜோடி.இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்கள். இது விஜய் டிவி வரலாற்றில் வெற்றிகரமான சீரியலாக மாறியது. இன்றும் பலரும் இந்த சிரீயலின் பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.
10ம் ஆண்டில் காலடி வைத்த ஜோடி
அந்த சீரியலில் நடித்து கொண்டே இருந்த போது செந்தில், ஸ்ரீஜா இடையே காதல் மலர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் அண்மையில் தங்களுடைய 10 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக, கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தனர்
இது குறித்து செந்தில் பேசும் போது, “இவளுக்கு தேவ் பிறப்பதற்கு முன்னதாக இரண்டு மூன்று தடவை கரு உண்டாகி கலைந்து விட்டது. அது அனைத்துமே மிகவும் கஷ்டமான தருணங்கள். இரண்டு பேருமே குழந்தையை அப்படி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு நனவாகவில்லை இதனையடுத்துதான் இவள் ஒரு நாள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினாள்.நான் முன்னதாக சில மோசமான சம்பவங்களை சந்தித்த காரணத்தால், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சரி கொஞ்ச நாள் போகட்டும்; பார்க்கலாம் என்று சொன்னேன்.
ஸ்ரீஜா பட்ட வேதனைகள்
அப்படி இருந்தும், சில சமயங்களில் எனக்கு மோசமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. நமக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நமக்கு நிகழும் மகிழ்ச்சியான செய்தியை முதலிடம் குடும்பத்திடம் சொல்லி, குதூகலப்படுத்தி விடுவோம். அதன் பின்னர் அவர்களிடம் அப்படி இல்லை என்று சொல்லும் பொழுது, அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். இதனையடுத்து பேசிய ஸ்ரீஜா உண்மையில் எங்களுக்கு குழந்தை இல்லை என்று நாங்கள் வருத்தப்பட்டதே கிடையாது.ஆனால் சுற்றி இருப்பவர்களின் வருத்தம்தான் எங்களை மிகவும் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.
எனக்கு புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. அவளுக்கும் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன. இது எல்லா காதல் திருமண வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதுதான். கல்யாணத்திற்கு முன்னதாக எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஆனால், கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு இடையேயான புரிதலில் சின்ன குழப்பம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் புரிதல் சரியாகி, எங்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. இப்போது எங்களுடைய மகன் அந்த புரிதலை இன்னும் அதிகமாக மாற்றிவிட்டான். காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாணம் செய்து கொண்ட பின்னரான முதல் 3 வருடங்களை நீங்கள் எப்படியாவது கடந்து விட வேண்டும்.
வெட்டிங் ரிங்
ஆம், வெளிநாடுகளில் அந்த தருணத்தில் வெட்டிங் ரிங் போடுவார்கள். அந்த மூன்று வருடங்களை நீங்கள் கடந்து விட்டால் உங்களுக்குள் பிரிவு வராது. காரணம் அவரைப்பற்றி உங்களுக்கும், உங்களைப்பற்றி அவருக்கும் இடையேயான புரிதல் ஒரு நிலைக்கு வந்திருக்கும். இது என்னுடைய மனதில் பதிந்து விட்டதால் என்னமோ தெரியவில்லை. வெட்டிங் ரிங் போட்ட பின்னர். எங்களுடைய வாழ்க்கை சுமூகமாக சென்றது.
ஸ்ரீஜா பேசும் போது, “ நான் கேமராவுக்காக வேண்டுமென்றால் பொய் பேசலாம். ஆனால் உண்மையில், எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடந்திருக்கிறது. மோசமாக சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதும் சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். மகன் பிறந்து விட்டதால், இப்போது அதற்கு நேரம் கிடைக்க வில்லை.
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கெல்லாம் மிகவும் மோசமாக சண்டை போட்டு இருக்கிறோம். ஆனால் அதனை கடந்து மீண்டும் அவருடன் பேச வேண்டும் என்று தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்றே சொல்வேன். காரணம், இந்த உறவுக்குள் இரத்த சம்பந்தம் இல்லை அல்லவா? உங்களது உறவிலும், அந்த மேஜிக் வந்து விட்டால், என்ன ஆனாலும் சரி, அந்த உறவு நம்மை விட்டுப்போகாது.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்