Saravana Vikram: இது என்ன டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை- அதிரடி முடிவு எடுத்த சரவண விக்ரம்.. ஷாக்கான ரசிகர்கள்!-saravana vikram posts in instagram that he want to quit the passion - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saravana Vikram: இது என்ன டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை- அதிரடி முடிவு எடுத்த சரவண விக்ரம்.. ஷாக்கான ரசிகர்கள்!

Saravana Vikram: இது என்ன டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை- அதிரடி முடிவு எடுத்த சரவண விக்ரம்.. ஷாக்கான ரசிகர்கள்!

Aarthi Balaji HT Tamil
Jan 21, 2024 08:28 AM IST

Saravana Vikram Insta post: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்ட சரவண விக்ரம் அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்.

சரவண விக்ரம்
சரவண விக்ரம்

(கங்கா சந்திரமுகி ரூமுக்கு போனா..

கங்கா சந்திரமுகியா நின்னா..

கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சுகிட்டா..

இப்போ சந்திரமுகியா மாறிட்டா ) என்ற வசனத்திற்கு ஏற்றார் போல சரவண விக்ரம் தன்னை டைட்டில் வின்னராக அறிவிப்பது போல் நினைத்து கொண்டார்.. டைட்டில் வின்னர் என்ற பெயரை மக்கள் மனதில் நிக்க வைத்து அந்த பெயரை வாங்கி கொண்டார். மீம்ஸ் மூலமாக இது ட்ரெண்டானாலும் நிகழ்ச்சியின் கடைசி நாளில் மாயா, உண்மையில் நீ டைட்டில் வின்னர் என சரவண விக்ரமை பாராட்டினார். 

நிகழ்ச்சி நடக்கும் சமயத்தில் ஃபேமிலி சுற்றில் சரவண விக்ரமின் தங்கை உள்ளே வந்து, மாயாவிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும், நம்ப வேண்டாம் என எச்சரித்து சென்றார். அப்போது மாயாவின் குணம் புரிந்து அவர் ஒதுங்கி இருந்தார்.

அடுத்த வாரமே 84 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய சரவண விக்ரம் எவிக்‌ஷனை சந்தித்து வெளியேறினார். அந்த சமயத்தில் மாயா நடந்து கொண்ட விதம் போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்கும் முகம் சுளிக்க வைத்தது. 

ஆனால் ஃபினாலே நேரத்தில் அதை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மாயாவுடன் அவர் சேர்ந்து பழகிய விதம் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தன் தங்கை சொன்னது தவறு என நினைத்து கொண்டு மாயாவுடன் பழக ஆரம்பித்துவிட்டார்.

எதனால் சரவண விக்ரம் இது போன்று நடந்து கொள்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். 

இதனால் சரவண விக்ரமின் தங்கைக்கு கோபம் வந்தது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், “ ஒருவர் குடும்பத்தை விட வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தவறான பாதைக்கு செல்கிறீர்கள் என்று அர்த்தம் “ என பதிவிட்டு இருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தது அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுடன் இணைந்து வெளியே செல்வது, ரசிகர்களை சந்திப்பது என மகிழ்ச்சியாக இருந்தார் சரவண விக்ரம். 

இப்படியான நிலையில் சரவண விக்ரம் நேற்று ( ஜனவர் 20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அதில், " I Quit My Passion " என்ற பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை பதிவிட்ட சில நிமிடங்களில் அதனை நீக்கிவிட்டார். 

அத்துடன் அந்த பதிவில், எல்லோருக்கும் நன்றி என கேப்ஷனும் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் தன் கனவு என நினைத்த நடிப்பை விட்டு, சரவண விக்ரம் விலகி விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இருப்பினும் இது குறித்த விளக்கத்தை சரவண விக்ரம் தெரிவித்தால் மட்டுமே அது உண்மையானதா? என்பது குறித்து தெரிய வரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.