Sarathkumar: ரம்மி விளம்பர கேள்வி;‘மரியாதை இல்லாம போயிரும்’; கொந்தளித்த சரத்!
ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்த கேள்வியை கேட்டு இந்த சந்திப்புக்கு மரியாதை இல்லாமல் செய்து விட வேண்டாம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசியிருக்கிறார்
சமத்துவமக்கள் கட்சியின் 7 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் மீண்டும் தலைவராக சரத்குமாரே தேரந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது அவர் பேசியதாவது, “
ஆன்லைன் ரம்மியில் சரத்குமார் நடித்தது குறித்து கேட்ட போது, “ஆன்லைன் ரம்மி விளம்பரமானது நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடித்தது. மீண்டும் மீண்டும் என்னிடம் இது தொடர்பான கேள்வி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து இப்படியே கேட்டுக்கொண்டிருந்தால் இந்த கூட்டத்திற்கே மரியாதை இல்லாமல் போகி விடும். நான் மட்டும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்க வில்லை. என்னை மட்டும் குறைசொல்லிக்கொண்டிருக்க கூடாது. அது சட்ட விரோதமான காரியமில்லை.
அதற்கான தடை சட்டம் இயற்றும் போது நான் அதில் நடிக்க வில்லை. ஆகையால் நான் சட்டத்திற்கு புறம்பான செயலில் நான் ஈடுபடவில்லை. ஆகையால் அந்த கேள்வியை கேட்டு இந்த சந்திப்பை கெடுக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை மத்திய அரசும், மாநில அரசும் அதற்கு தடை சட்டம் இயற்றி தடுக்க வேண்டும்.” என்றார்.
கவர்னரின் நடவடிக்கை குறித்து கருத்து
நீட் தேர்விற்கு எதிராக நாங்கள் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். ஆளுநர் தமிழ்நாடு அரசும் அனுப்பும் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வருகிறார். அது தவறு. அது வேலை செய்ய விடாமல் தடுப்பதாக பொருள் படும். வரக்கூடிய தேர்தலில் அதிமுக, திமுக என எந்த அணியுடனும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எப்படியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை கடைசி 2 மாதங்களில் ஆலோசித்து சொல்கிறேன். தமிழ்நாட்டில் 6 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. இந்த கடன் சுமையை எப்படி தமிழக அரசு எப்படி குறைக்க போகிறது. அது குறித்து தெளிவான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.” என்று அவர் அதில் பேசினார்.