Sarathkumar: ‘விவாகரத்துதான்; ஆனா காழ்புணர்ச்சி இல்ல..’ - முதல் மனைவி குறித்து சரத்குமார் உருக்கம்!
இருவரது வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் இன்றும் வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் கடந்த 1984ம் ஆண்டு சாயா தேவியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த மகள்தான் வரலட்சுமி சரத்குமார். இருவரது வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனையடுத்து சாயா தேவி தன்னுடைய மகளான வரலட்சுமி சரத்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த சரத்குமார் தன்னுடைய முதல் மனைவி குறித்து பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “உண்மையில் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது மிகவும் கருணையாக இருக்கிறார். வரலட்சுமியின் அம்மாவை நான் விவாகரத்து செய்த போதும், அவரும் எங்களுடன் பல நிகழ்வுகளில் சேர்ந்து, மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் அமைப்பு உருவாகி இருக்கிறது.
அவரும் வரலட்சுமியிடம் நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. சில காரணங்களால் நாங்கள் எங்களுக்கான பாதைகளில் வாழ்கிறோமே தவிர, காழ்புணர்ச்சி வைத்துக்கொள்ளவில்லை. நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம்.
எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் வரலட்சுமிக்கும் ராதிகாவிற்கும் பழகுவதில் நெருடல்கள் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.” என்று பேசினார்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்