தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sarathkumar Interview: ‘அரவணைப்பின் அச்சாணி’.. ‘முன்னாள் மனைவியும் ராதிகாவும் அப்படி வந்து’ - ராதிகா குறித்து சரத்!

Sarathkumar Interview: ‘அரவணைப்பின் அச்சாணி’.. ‘முன்னாள் மனைவியும் ராதிகாவும் அப்படி வந்து’ - ராதிகா குறித்து சரத்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 29, 2024 08:08 AM IST

நான் என்னுடைய முன்னாள் மனைவியை விட்டு பிரிந்து வந்தாலும், அவரையும் அரவணைத்து, அவருக்கு பிறந்த என்னுடைய குழந்தைகளையும் அரவணைத்து, இந்த குடும்பத்தை சரியான நேர்கோட்டில், ஒன்றாக இருக்கும் படியாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

சரத்குமார் பேட்டி!
சரத்குமார் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “கல்யாண நாளன்று நான் சரியாகத்தான் வந்தேன். ஆனால் நான் மேடைக்கு, 10, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தேன் என்று ராதிகா சொன்னார். இதையடுத்து, நான் தப்பிக்க முயற்சி செய்திருக்கிறேனோ என்று நினைத்ததாகவெல்லாம், அவர் என்னை கிண்டல் அடித்தார்.

இன்றும் பல குடும்பங்கள் இணைகின்றன, பிரிகின்றன. முதலில் ராதிகா என்னுடைய நண்பர். அதன் பின்னர் தான் அவர் என்னுடைய மனைவி. அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். 

குறிப்பாக, நான் என்னுடைய முன்னாள் மனைவியை விட்டு பிரிந்து வந்தாலும், அவரையும் அரவணைத்து, அவருக்கு பிறந்த என்னுடைய குழந்தைகளையும் அரவணைத்து, இந்த குடும்பத்தை சரியான நேர்கோட்டில், ஒன்றாக இருக்கும் படியாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார். 

அவர் என்னுடைய முன்னாள் மனைவியை வரலட்சுமியின் அம்மா என்றெல்லாம் பார்த்தது இல்லை. ஆனால் இன்றும் அவர் அவருக்கு மரியாதை கொடுக்கிறார். இன்னும் சொல்லப்போனால் வரலட்சுமி நடிக்க வேண்டும் என்று சொன்ன பொழுது, என்னுடைய முன்னாள் மனைவி வரலட்சுமியிடம், எதை செய்தாலும் உன்னுடைய அப்பாவிடம் அனுமதி வாங்காமல் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, வரலட்சுமி என்னிடம் வந்தார். 

நான் முடியாது என்றேன். ஆனால் ராதிகாவும், வரலட்சுமியின் அம்மாவும் என்னை  ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து சந்தித்து, உட்கார வைத்து, ஏன் அவள் நடிக்க கூடாது என்று கேள்வி கேட்டார்கள். அந்த அளவுக்கு ராதிகா குடும்பத்தை அழகாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார்” என்று பேசினார். 

முன்னதாக, சரத்குமாரின் முன்னாள் மனைவியான சாயா சரத்குமார் விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அவள் கிளிட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் சொல்வதற்கில்லை. உண்மையில் திருமணம் செய்து கொள்வதற்கு முதலில் நாம் மனதளவில் தயாராக வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நீங்கள் திருமணம் செய்து கொள்வது சரியான காரணங்களுக்காக இருக்க வேண்டும். எமோஷனலாகவும், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் தேர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

திருமணம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. கல்யாணம் என்பது ஒரு பயணம். பயணத்தில் நீங்கள் சரிவர பயணம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் தேர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்.

இங்கு சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அது திருமணம் கிடையாது. உடல் தேவை என்பது திருமணத்தில் மிக மிக சிறிய பங்கு தான். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் மனதளவில் திருமணத்திற்கு தயாராக வேண்டும்.

நீங்கள் திருமணத்தை சரியான காரணங்களுக்காக செய்யும்பொழுது, அந்தப் பயணம் என்பது பெரிதளவு இடையூறு இல்லாமல் செல்லும். ஆனால் நீங்கள் தவறான காரணங்களுக்காக செய்யும்பொழுது, அது முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன

நான் விவகாரத்தை ஆதரிப்பது கிடையாது. நீங்கள் விவகாரத்து முடிவை எடுக்கும் முன்பு எங்கேனும் ஒரு வாய்ப்பு மீண்டும் இணைந்து வாழ்வதற்காக இருந்தால் தயவு செய்து அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால், ஒரு முறை நீங்கள் விவகாரத்து முடிவு எடுத்தால், அதன் பின்னர் நீங்கள் மிகப்பெரிய வலியை சந்திக்க வேண்டி இருக்கும். அது எல்லாவித கோணங்களில் இருந்தும் வரும்.

மனதளவில், உடலளவில், சமூக அளவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.குழந்தைகள் இருப்பின் அந்த நிலைமை இன்னும் மோசமாக மாறும். ஆகையால் விவாகரத்து முடிவை எடுக்கும் முன்பு நன்றாக யோசியுங்கள்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது மிக மிக முக்கியம். அவர்கள் எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலைகளில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களோடு அது இருக்க வேண்டும்

எப்போது நீங்கள் அதிகமாக கொடுக்க தயாராக இருக்கிறீர்களோ அப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களது பார்ட்னரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால், நீங்கள் சந்தோஷமாக வாழ முடியாது. இல்லை என்றால் நீங்கள் தனியாக மகிழ்ச்சியாக வாழ்வதே நல்லது” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்