Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்
‘அவர்களும், வடிவேலுக்கு பயந்து சிரிப்பு வரவில்லை என்று கூறினார்கள். எனக்கு இதைக் கேட்டவுடன் மிகவும் அப்செட் ஆகிவிட்டது. நான் உடனே வடிவேலுவை இல்லை; இது நன்றாக வரும் என்று எவ்வளவோ சம்மதிக்க வைத்தேன்.’ - அரசு டைரக்டர் சுரேஷ்!

அரசு திரைப்படத்தில் வடிவேலுவால் ஏற்பட்ட நெருக்கடிகளை அந்தப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் வரை கொண்டு வாருங்கள்
இது குறித்து அவர் பேசும் போது, ‘அரசு திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விவேக்தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் சென்று நான் கதையை சொன்ன பொழுது, முதல் பாதி வரைக்கும் தான் நான் இருக்கிறேன். இரண்டாம் பாதியில் என்னை காணவில்லை. ஆகையால் என்னை கிளைமாக்ஸ் வரை கொண்டு வாருங்கள் என்றார்.
அதற்கு நான் படம் இரண்டாம் பாதிக்கு மேலே வேறு ஜானருக்கு சென்று விடும். அப்படி இருக்கும் பொழுது, உங்களை கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்தால், அது சரியாக இருக்காது என்றேன். இதையடுத்து அவர் நாம் அடுத்த படத்தில் இணையலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இந்த நிலையில்தான் வடிவேலுவை கேட்கலாம் என்றார்கள். அக்ரஹார மக்கள் வேறு மாதிரியாக இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, வடிவேலு அதில் பொருந்துவாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இருப்பினும் அனைவரும் கேட்டுப்பார்க்கலாம் என்றார்கள்.