Sara Ali Khan: “கேதார்நாத் மீது நான் பெற்ற அன்பு”..சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவு கூறும் நடிகை சாரா அலி கான்!
Sara Ali Khan:நடிகை சாரா அலி கான் சமீபத்திய நேர்காணலில் தனது ‘கேதார்நாத்’ சக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவு கூர்ந்தார். இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.
நடிகை சாரா அலி கான் தனது அறிமுக படமான 'கேதர்நாத்'தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தினை அபிஷேக் கபூர் இயக்கினார்.
நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் கல்யாண கலாட்டா என்ற பெயரில் இப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற சக்க சக்க பாடல் மிகவும் வைரலானது. சாரா அலிகானைப் பொறுத்தவரை, அவரது முதல் படமான கேதார்நாத் எப்போதும் அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.
உணர்ச்சிவசப்பட்ட சாரா அலி கான்
சாரா அலிகானைப் பொறுத்தவரை, அவரது முதல் படமான கேதார்நாத் எப்போதும் அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். சமீபத்திய நேர்காணலில், சாரா தனது முதல் சக நடிகரும் மறைந்த நடிகருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கேதார்நாத் படப்பிடிப்பு தளத்திலிருந்து இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சாரா அடிக்கடி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார். இப்போது, மிட்-டே உடனான ஒரு நேர்காணலில் அவர். "மறைந்த நடிகர் சுஷாந்துடன் தான் செலவழித்த நேரத்தைப் பற்றி பேசி இருக்கிறார். இந்த நேர்காணலின் போது அவர் உணர்ச்சிவசப்படுவதைக் காண முடிந்தது.
‘கேதார்நாத்’ படப்பிடிப்பின் போது செலவழித்த நேரத்தை நினைவு கூர்ந்த சாரா, "பல (பிடித்த நினைவுகள்) உள்ளன. கட்டு சார் (இயக்குனர் அபிஷேக் கபூர்) விரைந்து கொண்டிருந்த ஒரு தருணம் இருந்தது. அவரும் சுஷாந்தும் இதற்கு முன்பு ஒன்றாக பணியாற்றியிருந்தனர். எனவே நான் சுஷாந்திடம் சென்றேன், 'இதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஒன்று இருக்கிறது, இது, இந்த வரி, எனக்குக் காட்டு. சும்மா காட்டினார்".
"நான் போய் அவனை காப்பி அடிச்சேன். நான் பேசும் விதத்தில் இந்தி பேச முடிவது, மக்கள் என்னைப் பற்றி அடிக்கடி பாராட்டும் ஒன்று, நான் நினைப்பது போல் ஆர்வமாக இருந்தாலும் சரி, அதில் பெரும்பாலானவை சுஷாந்த். கேதார்நாத் மீது எனக்கு என்ன அன்பு இருந்தாலும், அது நிறைய, எல்லாம் அவர் தான். என்னால ஞாபகமெடுக்க முடியாது" என்றாள் கண்களில் கண்ணீருடன்.
கேதார்நாத் பற்றி
இந்து மதத்தினைச் சேர்ந்த பெண், இஸ்லாம் ஆணை காதலிப்பது போன்ற கதை. 2013 ஆம் ஆண்டில் கேதர்நாத்தில் ஏற்பட்டட பேரரழிவு திடீர் வெள்ளத்தினை அடிப்படையாகவும் அந்த காதலையும் தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாரா அலிகான், சுஷாந்த் சிங் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சாரா அலிக்கு அடுத்தது என்ன
சாரா கடைசியாக ஏ வாடன் மேரி வாடன் படத்தில் நடித்திருந்தார். அமேசான் பிரேமில் வெளியான இப்படத்தில் அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற உஷா மேத்தாவின் பாத்திரத்தில் நடித்தார். தற்போது 3 படங்களில் பிஸியாக உள்ளார். அவர் அடுத்து அனுராக் பாசுவின் மெட்ரோவில் காணப்படுவார்.. டினோவில், ஆதித்யா ராய் கபூருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், பாத்திமா சனா ஷேக், அனுபம் கெர், நீனா குப்தா மற்றும் கொங்கனா சென் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு நவம்பரில் பெரிய திரையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்