Santosh Subramaniam: பார்ப்பவர்களின் சந்தோஷத்திற்கு கேரண்டி தரும் சந்தோஷ் சுப்ரமணியம்.. சட்டென ஒட்டிக் கொள்ளும் ஹாசினி!
Santosh Subramaniam: ஜெயம் ரவியின் நடிப்பு தந்தை பேச்சை மீற முடியாமல் தவிக்கும் தவிப்பிலும் கடைசியில் தந்தையிடம் வெடித்து குமுறுவதிலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். ஆனால் மனுசன் எல்லா காட்சிகளிலும் அவ்வளவு ஃபிரஷ் ஆக மலர்ந்த முகத்துடன் வருவது அத்தனை அழகு ஜெயம் ரவி.

Santosh Subramaniam: சந்தோஷ் சுப்பிரமணியம்.. தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவுகளை பற்றி பேசிய படம். 2008 ஏப்ரல் 11 ல் வெளியான இந்த படத்தை எல்லோரும் கொண்டாடினர். படத்துக்கு வயது பதினாறு தாண்டியும் இந்த படத்தை அத்தனை எளிதில் மறந்து கடந்து போக முடியாது. இப்போதும் தொலைக்காட்சியில் இந்த படம் ஓடும் போது நமது கண்களின் பார்வை திரும்புவதை தவிர்க்க முடியாது. இந்த படம் பொம்மரில்லு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படம்.
டைட்டில் ரோலில் ஜெயம் ரவி அவரது பெற்றோராக பிரகாஷ் ராஜ், கீதா, அக்காவாக கௌசல்யா, நாயகி ஜெனிலியா ஹாசினியாகவும் , இவர்களோடு எம்.எஸ் பாஸ்கர், விஜயகுமார், சாயாஜிசின்டே, மனோபாலா, மாணிக்கவிநாயகம், சந்தானம் பிரேம் ஜி, சத்யன், ஶ்ரீநாத் ஆகியோர் நடித்த படம். படத்தின் இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத்.
சந்தோஷின் அப்பா சுப்பிரமணி நகரில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் முக்கிய தொழில் அதிபர். அவர் இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் வாழும் கண்டிப்பான மனிதர். மனதில் பாசம் இருந்தாலும் வெளியே காட்டத் தெரியாதவர். இவருடைய கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரமாக வாழ ஆசைப்படும் மகன் சந்தோஷ்.
தனக்கு பிடித்த மாதிரி தொழிலையும், மனைவியையும் தேர்ந்தெடுத்து வாழ ஆசைப்படும் இளைஞன். அதற்கு மாறாக தனது தொழிலை கவனித்து வர சந்தோஷை தயார் படுத்தும் அப்பா. தனது நண்பர் ஒருவரின் மகள் ராஜேஷ்வரியை திருமணம் செய்ய அப்பாவின் நிர்ப்பந்தம் என்று சந்தோஷின் மனநிலைக்கு எதிர்மாறாக நடக்கிறது. இடையில் ஹாசினியாக வரும் ஜெனிலியாவை சந்திக்கிறார். அவரின் குறும்பான பேச்சும் குழந்தை தனமாக செய்யும் சேட்டைகளை கண்டு சந்தோஷூக்கு பிடித்து போகிறது.
இது இருவருக்கும் ஆன காதலாக உறுதி பெறுகிறது. அப்பாவிடம் மறைத்து வைத்தாலும் அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. ஏற்கனவே நண்பரின் மகள் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்ய உறுதி செய்த நிலையில் இந்த காதலையும் மறுக்கிறார். சுப்ரமணியன் தனது மகன் சந்தோஷிடம் ஜெனிலியா வை தமது வீட்டில் ஒருவாரம் தங்க வைக்க சொல்கிறார். பிறகு முடிவு செய்யலாம் என்று கூறுகிறார்.
சந்தோஷ் வீட்டில் தங்குவதற்கு வசதியாக சுற்றுலா செல்வதாக அனுமதி வாங்கி பிரகாஷ் ராஜ் வீட்டுக்கு வந்து தங்கும் ஜெனிலியா எல்லோருக்கும் செட் ஆகிறார். பிடித்து போகிறார். ஆனால் அவள் செய்யும் குறும்பான சேட்டைகள் கண்டு சந்தோஷ் திட்ட ஆரம்பிக்கிறார். வார இறுதியில் அவர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறுகிறார். ஒரு கட்டத்தில் அப்பா மகனுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு அப்பா முன்பு மகன் கோபத்தையும் தனது தரப்பில் இருந்து நியாயமான விசயங்களை அழுத்தமாக எடுத்து வைக்கிறார்.
ஒவ்வொரு முறையும் அப்பா மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாக கூறுவார். சுப்பிரமணியம் மனதில் சின்ன மாற்றம் ஏற்படுகிறது. சந்தோஷ் ராஜேஷ்வரியை திருமணம் செய்தாரா? ஜெனிலியா என்ன ஆனார் என்ற திருப்பங்களுடன் நிறைவுபெறும்.
இத்திரைப்படத்தில் ஜெனிலியா நடிப்பு அருமை. மெல்லிய ஒடிசலான தேகம். நடிப்பில் ஏதோ நம் பக்கத்து வீட்டு பெண்ணாக மனதில் ஒட்டி கொள்கிறார். கள்ளங்கபடமற்ற அன்பை எல்லோருக்கும் காட்டுபவர். குழந்தை போல் துறுதுறு என்று ரசிக்கும் படி சேட்டைகள் அனைத்தும் சுட்டித்தனமானவை. மகிழ்ச்சி, துக்கம், சோகம், கொஞ்சும் பேச்சு, துடிப்பாக கொட்டுவதுமாக வெரைட்டி வெரைட்டி யாக மிரட்டுகிறார்.
ஜெயம் ரவியின் நடிப்பு தந்தை பேச்சை மீற முடியாமல் தவிக்கும் தவிப்பிலும் கடைசியில் தந்தையிடம் வெடித்து குமுறுவதிலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். ஆனால் மனுசன் எல்லா காட்சிகளிலும் அவ்வளவு ஃபிரஷ் ஆக மலர்ந்த முகத்துடன் வருவது அத்தனை அழகு ஜெயம் ரவி. அப்பா பிரகாஷ் ராஜ் பற்றி என்ன சொல்வது. ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோரை உயர்த்தி பிடிக்கிறார். அத்தனை நடிகர்களும் கதையின் கணம் அறிந்து கச்சிதமாக நடித்துள்ளனர். படத்திற்கு வயது பதினாறு தான். இப்போது பார்த்தாலும் மனதில் நல்ல படம் பார்த்த சந்தோஷத்தை அள்ளி தரும் என்று கேரன்டியாக சொல்லலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்