Tamil News  /  Entertainment  /  Santhanam Movie Heroine Shirin Kanchwala Got Engaged

Shirin Kanchwala: தொழிலதிபரை கரம் பிடிக்கும் சந்தானம் படம் ஹீரோயின்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 10, 2024 07:45 PM IST

கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழில் நான்கு படங்களில் நடித்தவர். ஷிரின் காஞ்ச்வாலா. இவருக்கு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

வருங்கால கணவருடன் நடிகை  ஷிரின் காஞ்ச்வாலா
வருங்கால கணவருடன் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா

ட்ரெண்டிங் செய்திகள்

இவருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான அசார் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி ஷிரின் காஞ்ச்வாலாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது அதுகுறித்து வெளிப்படுத்தியிருக்கும் அவர், திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஷிரின் காஞ்ச்வாலா திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் - பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி ஆகியோரின் திருமணம் குறித்த தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே திருமண பந்தத்தில் இணையும் மற்றொரு நடிகையாகியுள்ளார் ஷிரின் காஞ்ச்வாலா.

மும்பையை சேர்ந்த ஷிரின் காஞ்ச்வாலா, மாடலிங்கில் இருந்த நிலையில் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் ரியோ ராஜுடன் இணைந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சிபிராஜ் ஜோடியாக வால்டர் படத்தில் நடித்தார். பின்னர் சந்தானதுடன் இணைந்து டிக்கிலோனா படத்தில் நடித்த இவர், மிஸ்டர். ஜூ கீப்பர் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகிவில்லை.

விரல் விட்டு எண்ணும் அளவே படத்தில் நடித்திருக்கும் ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது திருமதி ஆகவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.