Redin Kingsley: என்னங்க சொல்றீங்க, அதுக்குள்ளையா? ரெடின் கிங்ஸ்லிக்கும் மனைவி சங்கீதாவுக்கு இடையே பிரச்சனையா?
ரெடின் கிங்ஸ்லியுடன் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாக பரவி வரும் வதந்தி குறித்து சங்கீதா விளக்கம் அளித்து உள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய, டாக்டர் திரைப்படத்தில் பகத் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பிற்காக அறியப்பட்டவர் ரெடின் கிங்ஸ்லி.
'கோலமாவு கோகிலா,' 'எல்.கே.ஜி.,' மற்றும் 'கூர்க்கா' போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் கிங்ஸ்லியின் எழுச்சி தொடங்கியது. இருப்பினும், 'டாக்டர்' படத்தில் அவரது சித்தரிப்பு தான் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அவரது நகைச்சுவை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியது.
இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக அங்கீகரிக்கப்பட்ட கிங்ஸ்லியின் நட்பும், திரைப்படத் தயாரிப்பாளருடனான உறவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
'டாக்டர்' திரைப்படத்தில் அவரது பிரேக்அவுட் வெற்றிக்குப் பிறகு, கிங்ஸ்லி ஒரு தேடப்படும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார், தொழில்துறை ஜாம்பவான்களுடன் இணைந்து திரையுலகைக் கவர்ந்தார்.
ரஜினிகாந்துடன், 'அண்ணாத்தே', விஜய்யுடன் 'பீஸ்ட்', விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', சிம்புவுடன் 'பத்து தலை', விஷாலுடன் 'மார்க் ஆண்டனி', மற்றும் விஷ்ணுவுடன் 'கட்டா குஸ்தி' போன்ற படங்களில் நடித்தது அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகளில் அடங்கும். விஷால்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 'ஜெயிலர்' திரைப்படத்தில் கவர்ந்த கிங்ஸ்லியின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களின் அன்பை ஈர்த்தது. ஒரு முன்னணி நகைச்சுவைத் திறமையான அவரது நிலையை உறுதிப்படுத்தியது.
அவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சீரியல்களில் தோன்றியதை தவிர, சங்கீதா சில படங்களில் நடித்து உள்ளார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும், 'ஆனந்த ராகம்' சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை சங்கீதா தாம்பரத்தில் நடந்து வரும் டபுள் டக்கர் அருங்காட்சியத்தை விளம்பரம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சிலர், ஏன் ரெடின் கிங்கிஸி உங்களுடன் வருவது இல்லை? நீங்கள் பிரிந்துவிட்டீர்களா? என கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சங்கீதா, “ நாங்கள் இருவரும் எப்போது எங்கள் வேலையில் சரியாக இருப்போம். என் கணவர் எப்போதுமே ஷூட்டிங்கில் தான் இருப்பார். திருமணமான நாள் முதல் இப்போது வரை ஷூட்டிங் தான் அவருக்கு முக்கியமானது. நானும் அதை புரிந்து கொள்வேன்.
இன்று காலை கூட அவர் 8.00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டும் மதியம் கிளம்பி சென்று விட்டார். திருமணம் செய்யும் முன்பு அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது.
நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அவர் அவருடைய வேலையில் பிஸியாக இருக்கிறார். இருவரும் சேர்ந்து நேரத்தை செலவிடுவது கொஞ்சம் குறைவு தான். ஆனால் எங்கள் அன்பு நிறைய தான் இருக்கிறது. ஆனால் அது தெரிந்தும் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
இரவு நேரத்தில் கூட அவர் படப்பிடிப்புக்கு செல்வது எனக்கு பிரச்னை என்று எல்லாம் கிடையாது. அவர் வேலை தான் முக்கியம். மற்ற படி வேறு எந்த பிரச்னையும் எங்களுக்கு இடையில் கிடையாது “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்