தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sandra Amy Prajin Opens About Her Life Struggle

Sandra Amy Prajin: பிரிந்து சென்ற தாய், தந்தை.. சித்தியால் சாண்ட்ரா அனுபவித்த கொடுமைகள் இவ்வளவா?

Aarthi Balaji HT Tamil
Mar 17, 2024 05:30 AM IST

Sandra Amy: சாண்ட்ராவின் சகோதரர் 2006 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்தார். அண்ணன் இறந்த பிறகு தன் அண்ணனின் காதலி தற்கொலை செய்து கொண்டார்.

சாண்ட்ரா எமி
சாண்ட்ரா எமி

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் பிரஜின் பட்னாபனை மணந்தவர் சாண்ட்ரா. இருவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தன. சாண்ட்ரா வாழ்க்கையில் பல கடினமான கட்டங்களை சந்தித்துள்ளார். தற்போது நடிகை இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை பற்றி பேசி இருக்கிறார்.

சாண்ட்ரா தனது இளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து செய்ததாக கூறுகிறார். ”என் பெற்றோர் பிரிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நானும், என் சகோதரனும், என் தந்தையுடன் இருந்தோம். என் தந்தை வேறு திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை அண்ணனிடம் சொன்னதும் சரி என்றார். நான் சொல்லமாட்டேன். இன்னைக்கு ஓகே சொல்லலைன்னா என் வாழ்க்கையே பாழாப் போனதுக்கு நீ தான் காரணம் என்று சொல்லுவார் என நினைத்தோம். நாங்க வளர்ந்ததும் அப்பா சொல்வார், அதை ஏற்றுக் கொள்வோம்.

அதனால் ஒப்புக் கொண்டேன். அதனால் என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சித்தியால் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் வந்தன. வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்வது நினைவுக்கு வந்தது.

சாண்ட்ராவின் சகோதரர் 2006 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்தார். அண்ணன் இறந்த பிறகு தன் அண்ணனின் காதலி தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் காதலிப்பது தெரியாது. அண்ணன் இறந்த மறுநாள் காலை அவரும் இறந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

மகளுக்கு அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. என்னுடன் என் அண்ணன் இல்லாதது இன்னும் கடினமாக உள்ளது. என்ன இருந்தாலும் அடுத்த செகண்ட் வந்து இருந்துச்சு. நான் முன்பு ஆன்மாவை நம்பவில்லை. ஆனால் அண்ணன் இறந்த பிறகு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் கேட்பதெல்லாம் கிடைக்கும். எப்படி என்று தெரியவில்லை. இந்த நாட்டிற்கு வந்து எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது.

எதுவும் நடக்கலாம். ஆனால், எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. சீரியல்கள் மூலம் கவனம் பெற்ற தனது கணவர் பிரஜன் குறித்தும் சாண்ட்ரா பேசினார். பிரஜனின் திறமையைப் பார்த்து திருமணம் செய்ய விரும்பி இருக்கிறார்.

அவருக்குள் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார். எனக்கு நல்ல நடிகர்களை மிகவும் பிடிக்கும். நாங்கள் இப்போது 25 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். காதலித்து ப்ரோபோஸ் செய்யும் முன் சொன்னேன், நீ நன்றாக நடிக்கிறாய், படங்களில் முயற்சி செய். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.

இவர் சீரியல்களின் ராஜா. ஆனால் சினிமா உலகில் அது ஒரு முட்கள் நிறைந்த பாதை. இன்னும் போராடி கொண்டு இருக்கிறார். ஆனால், தனது கணவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்.

பிரஜின் கூறுகையில், வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாத தனக்கு எல்லா ஆதரவையும் சாண்ட்ரா அளித்ததாக பிரஜின் கூறுகிறார். சாண்ட்ராவை நடிக்க தடை செய்ததில்லை. நடிப்பில் எனக்கு கட்டுப்பாடு இல்லை. திருமண வாழ்க்கையில் தான் மிகவும் கஷ்டப்பட்டார் “ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்