Sai Pallavi: ‘ரொமாண்டிக்கா? சாய் பல்லவிய மறந்துடுங்கனு சொன்னார்’ - இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேட்டி!
Sai Pallavi: ‘உடனே அவர் ரொமண்டிக்கான திரைப்படமா? ரொமண்டிக் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். உடனே நான், தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே காட்டப்பட்ட ரொமண்டிக்கான காட்சிகளை விட, இதில் அதிகமாக ரொமண்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். - சந்தீப் ரெட்டி வங்கா!

‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முதலில் சாய் பல்லவியை நடிக்க கேட்டதாக சந்தீப் ரெட்டி வங்கா பேசி இருக்கிறார்.
ரொமாண்டிக்கான படம்
நாகர்ஜூனா, சாய்பல்லவி நடிப்பில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக இருக்கும் ‘தண்டேல்’ பட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் ரெட்டி வங்கா, ‘ ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் முதலில் நான் சாய்பல்லவியை நடிக்க வைக்கலாம் என்று எண்ணி, கேரளாவில் இருந்த ஒருகிணைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு, சாய் பல்லவியை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும். இது ரொமாண்டிக்கான படம் என்றேன்.
உடனே அவர் ரொமண்டிக்கான திரைப்படமா? ரொமண்டிக் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். உடனே நான், தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே காட்டப்பட்ட ரொமண்டிக்கான காட்சிகளை விட, இதில் அதிகமாக ரொமண்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். உடனே அவர், சாய்பல்லவியை நடிக்க வைப்பதை மறந்து விடுங்கள். அந்தப்பெண் ஸ்லீவ்லெஸ் ஆடையை கூட அணியமாட்டார் என்று சொன்னார். பின்னாளில் அவர் உங்களின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்’ என்று பேசினார். இதைக்கேட்ட சாய்பல்லவி சிரித்தார்.
சாய் பல்லவி மாறவே இல்லை
அதனை தொடர்ந்து பேசிய சந்தீப், காலப்போக்கில், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் கதாநாயகிகள் மாறி விடுவார்கள். ஆனால், சாய் பல்லவி சிறிதும் கூட மாறாமல் இருப்பது பெரிய விஷயம். இது உண்மையில் மிகவும் சிறந்தது.’ என்று பேசினார்.
‘அர்ஜுன் ரெட்டி’ சந்தீப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’.இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு சந்தீப் இந்தப்படத்தை ‘கபீர் சிங்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார்.
இதில் ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். அந்த படமும் பிளாக்பஸ்டராக மாறியது. அதனை தொடர்ந்து இவர் எடுத்த ‘அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியது. இந்தப்படத்தில் ரன்பீ கபூர் மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தன. சந்தீப் அடுத்ததாக பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிறார். இதற்கான வேலைகளில் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.
‘தண்டேல்’ திரைப்படம்
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘தண்டேல்’ திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். சந்தூ மொண்டேடி இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒரு பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடலில் விழுந்த மீனவர்களின் அனுபவத்தைச் சுற்றி இந்தக்கதை நகர்கிறது. இந்தப்படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷம்தத் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்