Sanam Teri Kasam: ரிலீஸில் ஃப்ளாப்; ரீ ரிலிஸில் ப்ளாக் பஸ்டர்.. வசூலில் சக்கை போடு போடும் படம் - காரணம் என்ன?
Sanam Teri Kasam: ‘நேற்றைய தினம் ‘சனம் தெரி கசம்’ திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்திருக்கிறது என்றும் இரண்டாவது நாளான நேற்று இந்தத் திரைப்படம் 5 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருக்கிறது’ - காரணம் என்ன?

Sanam Teri Kasam: கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஹர்ஸ்வர்தன் ரானே மற்றும் பாகிஸ்தான் நடிகை மவ்ரா ஹோகேன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘சனம் தெரி கசம். இந்தப்படம் வெளியான பொது மக்கள் இந்தப்படத்திற்கு பெரிதான வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப்படம் அடி வாங்கியது. ஆனால் இப்போது நிலைமையே வேறு. ஆம், கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்தத்திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.
அமோக வரவேற்பு
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, மக்கள் இந்தப்படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால், இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk இணையதளம் வெளியிட்ட தகவல்களின் படி, நேற்றைய தினம் ‘சனம் தெரி கசம்’ திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்திருக்கிறது என்றும் இரண்டாவது நாளான நேற்று இந்தத் திரைப்படம் 5 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. ஆக மொத்தமாக பார்க்கும் போது, இரண்டு நாட்களில், இந்தப்படம் 9.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.
‘சனம் தெரி கசம்’
அத்துடன் இந்தக்கணக்கின் படி பார்க்கும் போது, 2016 ம் ஆண்டு ‘சனம் தெரி கசம்’ வசூல் செய்த மொத்த தொகையை (8 கோடி) விட, ரீ ரிலீஸில் இரண்டு நாள் வசூல் அதிகம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தப்படம் இப்படி பிய்த்துக்கொண்டு ஓடுவதற்கு காரணம் என்னவென்றால், ஓடிடி மற்றும் டிவியில் இந்தத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததே.. அதனை கனகச்சிதமாக பயன்படுத்திய படக்குழு படத்தை ரீ ரிலிஸ் செய்திருக்கிறது.
இதன் மூலம் லைலா மஜ்னு, தம்பட் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆரம்ப ரிலீஸில் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்து, ரீ ரிலீஸில் நல்ல வசூல் பார்த்தது. இந்தப்பட்டியலில் தற்போது சனம் தெரி கசம் திரைப்படமும் இணைந்திருக்கிறது. அண்மையில் இந்தப்படத்தின் நடிகை மாவ்ரா ஹோகேன், நடிகை அமீர் கிலானியை கரம் பிடித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்