Samantha: ஆந்திராவிலுள்ள பத்மாவதி கோயிலில் சமந்தா சாமி தரிசனம்! ரசிகர்களுடன் செஃல்பி
பிஸியான பணிகளுக்கு இடையே ஆன்மிக பயணத்தையும் தவறாமல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிக்கும் நடிகை சமந்தா ஆந்திராவில் உள்ள பத்மாவதி அம்மாவாரி கோயிலில் தோழியுடன் இணைந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன் நான் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டதாக சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்தார் நடிகை சமந்தா. இதன் மூலம் கடந்த 2022இல் நடிப்பிலிருந்து குட்டி பிரேக் எடுக்கப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது மறுபடியும் நடிப்பு பக்கம் திரும்பியிருப்பதை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமந்தா படங்களில் நடிக்காத போதிலும் அவரைப்பற்றி ஏதாவதொரு செய்தி, தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தோழியுடன் இணைந்து இன்ஸ்டாவில் ஹெல்த் போட்கேஸ்ட் செய்து வருகிறார் சமந்தா. இதற்கு அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது.
பத்மாவதி கோயிலில் நடிகை சமந்தா
தனது பிஸியான பணிகளுக்கு இடையே சாமி தரிசனம், கோயில் விசிட் என ஆண்மிகத்தில் ஈடுபட்டு வரும் சமந்தா, ஆந்திரா மாநிலம் திருச்சானூரில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலுக்கு சென்றுள்ளார். இதுதொடர்பான விடியோவை சமந்தாவின் குழுவினர் பகிர்ந்திருக்கிறார்கள். தனது ஸ்டைலிஸ்ட் மற்றும் தோழி பீரத்தம் ஜுகல்கருடன் அவர் பத்மாவதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
குர்தா, பைஜாமா அணிந்து மிகவும் சிம்பிளான லுக்கில் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்த நிலையில், வெளியே வந்த அவரை காண இருந்து கூட்டத்தினர் பார்த்து கையசைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் சிலர் அவருடன் செஃல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, "சமந்தா தனது வழக்கமான பணிக்கு மீண்டும் திரும்புவார் என கூறப்பட்டிருந்தது. ப்ரேக் சமயத்தில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சரியான புத்துணர்வு பெற்றிருக்கும் அவர் தற்போது நலமாக இருக்கிறார். தற்போது ஆற்றல் மிக்கவராக உணரும் நிலையில் இருக்கும் அவர், அதை தனது பணியிலும் வெளிப்படுத்துவார்.
நடிப்பு பக்கம் மீண்டும் திரும்புவார். அவர் அதற்கான எதிர்பார்ப்புடன் இருந்து வருவதாக" சமந்தாவுக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன், விரைவில் அவர் சிட்டாடல் டிவி சீரிஸ் புரொமோஷனில் பங்கேற்பார் எனவும், ஒப்புக்கொண்ட புதிய படங்களிலும் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது.
மயோசிடிஸ் பாதிப்பு
மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் பாதிப்பால அவதிப்பட்டு வந்தார் சமந்தா. இந்த நோய் ஏற்பட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் தாக்கும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் தசைகள் மிகவும் வலுவிழந்து காணப்படுவார்கள்.
இந்த நோயின் தீவிரத்தில் இருந்து விடுபடவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும், சில சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவும் இந்த ரெஸ்ட் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். தற்போது குணமாகி உடல் நிலை தேறிவிட்டதால் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டில் குஷி, சகுந்தலம் ஆகிய படங்கள் வெளியானது. ஹாலிவுட் டிவி சீரிஸான சிட்டாடல் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
தமிழில் சமந்தா நடிப்பில் கடைசியாக காத்துவாக்குல ரெண்ட காதல் திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டில் சமந்தாவின் புதிய கமிட்மெண்ட்கள் குறித்து அடுத்தடுத்து சர்ப்ரைசான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

டாபிக்ஸ்