Samantha: “உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு-samantha supports vinesh phogat after gets disqualified in paris olympics - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: “உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு

Samantha: “உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 07, 2024 07:26 PM IST

உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்க்கு நடிகை சமந்தா ஆதரவு அளித்துள்ளார்.

வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு
வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு

இந்திய ஒலிம்பிக் சங்கம்மேல் முறையீடு

ஃப்ரீஸ்டைல் 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், அதிக எடையுடன் காணப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதை குறைத்துவிட அவகாசம் கேட்டபோதும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தர மறுத்துவிட்டது.

இதையடுடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

சமந்தா ஆதரவு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்க்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், அவரது தகுதி நீக்கத்துக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையடுத்து நடிகை சமந்தா, வினேஷ் போகட்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பதிவில் போக்ட் புகைப்படத்துடன், "சில நேரங்களில், மிகவும் நெகிழ்ச்சியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.

நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது.

உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் @vineshphogat." என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல், திரைப்பிரபலங்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆரம்ப போட்டியில் ஜப்பான் வீராங்கனை சுசாகி என்பவரை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார் வினேஷ் போகட். இதன் பின்னர் காலிறுதி போட்டியில் உக்ரைனை வீராங்கனை ஆக்சான லிவாச் என்பவரை 7-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் க்யூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் துர்தஷ்டவசமாக அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பதக்கமும் பெற முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனையான வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர் எதிர்கொள்ள இருந்த அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு தங்க பதக்கம் வழங்கப்படும். வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. அதேபோல் அடுத்தடுத்த இடங்களை பெறும் இரண்டு பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிட்டாடல் ரிலீசை எதிர்நோக்கும் சமந்தா

சமந்தா தற்போது நடித்து முடித்திருக்கும் புதிய வெப்சீரிஸான சிட்டாடல்: ஹனி பன்னி வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் ஸ்டீரிம் ஆகவுள்ளது. இதன் டீசர் வெளியீட்டு நிகழ்வு கடந்த இரு நாள்களுக்கு மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஹாலிவுட் வெப்சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பாக சிட்டாடல்: ஹனி பன்னி உருவாகியுள்ளது. இந்தியில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்பட பிற மொழிகளிலும் சிட்டாடல்: ஹனி பன்னி ஸ்டீரிம் ஆகும் என தெரிகிறது.

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் நடிப்புக்கு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு கம்பேக் கொடுத்திருக்கும் சமந்தா சிட்டாடல் ரிலீசை எதிர்நோக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.