Samantha Therapy Video: எனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள்..! விடியோவுடன் சமந்தா வெளிப்படுத்திய ரகசியம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha Therapy Video: எனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள்..! விடியோவுடன் சமந்தா வெளிப்படுத்திய ரகசியம்

Samantha Therapy Video: எனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள்..! விடியோவுடன் சமந்தா வெளிப்படுத்திய ரகசியம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 15, 2024 08:25 PM IST

தனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள் குறித்து விடியோவுடன் சமந்தா வெளிப்படுத்தியுள்ளார். தான் மேற்கொண்ட சிகிச்சைகளில் அடங்கும் நன்மைகள் பற்றியும் விடியோ பகிர்ந்து விவரித்துள்ளார்.

தனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள்
தனது உடலை நலமும், வளமும் ஆக்கிய தெரபிக்கள்

சமந்தா மேற்கொண்ட தெரபி விடியோ

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாவில் விடியோ பகிர்ந்திருக்கும் சமந்தா, தெரபியால் தான் மேற்கொண்ட பலன்கள் குறித்தும் விவரித்துள்ளார். தான் பகிர்ந்திருக்கும் விடியோவில், " நான் இந்த தெரபி சிகிச்சைகளை மிகவும் ரசிக்கிறேன்! அவை மனம் மற்றும் உடல் என இரண்டுக்கும் அற்புதமான நன்மைகளை தருகின்றன.

இதில் சில நன்மைகளும் அடங்கும்:

• கொலாஜன் படுக்கை: தோல் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் இளமை தோற்றத்தை ஊக்குவிக்கிறது.

• ஹைபர்பேரிக் சிகிச்சை: ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது, பாதிப்புகள் குணப்படுத்துவதை விரைவுபடுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

• கிரையோதெரபி: வீக்கம் மற்றும் அழற்ச்சிவலியைக் குறைக்கிறது. ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

எனது சேனலான டேக் 20ஐ பாருங்கள். உங்கள் மனதையும் உடலையும் மேம்படுத்த பல்வேறு வழிகளை அதில் கண்டறியலாம்" என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தரும் விதமாக சிகிச்சை மேற்கொண்ட சமந்தா, தனது உடலை நலமுடனும், வளமுடனும் வைத்திருக்கும் தெரபி சிகிச்சைகள் குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்ட சமந்தா

கடந்த 2022இல் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதால் சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா. இதையடுத்து அவர் ஏற்கனவே நடித்து முடித்திருந்து குஷி, சகுந்தலம் ஆகிய படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகின. இதுதவிர அவர் சொன்னது போல் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அத்துடன் சினிமா ஷுட்டிங்கிலும் பங்கேற்கவில்லை.

ஆனால் மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு தான் மேற்கொண்ட சிகிச்சை பற்றி தொடர்ந்து அப்டேட்களும், அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் கம்பேக் கொடுத்த சமந்தா, நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். மீண்டும் சினிமா, பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட தொடங்கியிருக்கும் நிலையில், தோழியுடன் இணைந்து ஹெல்த் தொடர்பாக போட்காஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

எப்போதும் தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக இருந்து வரும் சமந்தா, தற்போது தான் மேற்கொண்ட சிகிச்சைகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் வெப்சீரிஸில் சமந்தா

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த வெப்சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பில் சமந்தா நடித்துள்ளார். சிட்டாடல்: ஹனி பன்னி என பெயரிடப்பட்டிருக்கும் இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த வெப்சீரிஸில் சமந்தா அதிரடி சண்டை காட்சியில் பட்டையை கிளப்பியுள்ளாராம்.

இந்த வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் விடியோவில் விரைவில் ஸ்டிரீம் ஆக இருக்கிறது. இந்த வெப்சீரிஸில் நடித்த பின்னர் தான் சமந்தா நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தார். தற்போது அவர் நடிப்புக்கு கம்பேக் கொடுத்தவுடன் வெளியாக இருக்கும் முதல் படமாக இந்த வெப்சீரிஸ் அமையவுள்ளது. இதுதவிர வேறு சில படங்களில் நடிக்க சமந்தா கமிட் ஆகியிருப்பதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி தகவல் வெளியிடப்படாமல் உள்ளது.

சிட்டாடல் ஹாலிவுட் வெப்சீரிஸில், பாலிவுட் டாப் நடிகையான பிரியங்கா சோப்ரா, ரிச்சட்டு மேடன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.