Dil Raju: ‘25 வருடத்தில் இப்படி ஒரு தோல்வியை பார்த்தது இல்லை’ - சாகுந்தலம் படத்தால் புலம்பும் தில் ராஜூ!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.

பிரபல நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் சாகுந்தலம்.
மகாபாரதத்தில் இடம் பெற்ற சகுந்தலா, துஷ்யந்தா காதல் கதையை வைத்து இயக்குநர் குணசேகர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தத் திரைப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, துஷ்யந்த் வேடத்தில் மலையாள நடிகர் தேவமோகனும் நடித்து இருந்தார்.
இவர்களுடன் மோகன் பாபு, கௌதமி, ஈஷார் ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரும், தமிழில் விஜயை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜூ குணசேகர் தனயா நீலிமா குணா உடன் இணைந்து இந்தத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.
