தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Samantha Says She Needed To Heal Inner Trauma, On Her Break In Cinema

Samantha: உள் காயங்களுக்கு அதிக சிகிச்சை தேவை - சினிமாவில் பிரேக் எடுத்தது குறித்து சமந்தா உருக்கமான பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2024 02:47 PM IST

வெளிப்புறத்தில் இருக்கும் பாதிப்பை குணப்படுத்துவதை விட உள் காயங்களுக்கு மருந்து அளித்து அதிகமாக சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியமானது என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

 ஃபெமினா போட்டோஷுட்டில் நடிகை சமந்தா
ஃபெமினா போட்டோஷுட்டில் நடிகை சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து வழக்கம்போல் ஷுட்டிங், நடிப்பு என பிஸியாகியுள்ள சமந்தா பிரபல பத்திரிகையான ஃபெமினாவின் பிரத்யேகமாக போட்டோஷுட்டில் பங்கேற்றுள்ளார்.

பல்வேறு கவர்ச்சிகரமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் நிலையில், அவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இதையடுத்து ஃபெமினாவுடன் சிறிய உரையாடலிலும் ஈடுபட்டார் சமந்தா. அப்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்ததற்கு உடல்நிலை மட்டும் காரணமாக இல்லை என தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேமினா இதழுக்கு பேட்டியளித்த சமந்தா கூறியதாவது:

"மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் அந்த நேரத்தில் நான் எடுத்த சரியான முடிவாகவே பார்க்கிறேன். சுய வெறுப்பு, தன்னம்பிக்கை இழந்திருந்த நான் என்னை நானே செதுக்கி கொள்வதற்கான நேரமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு இப்படியொரு விஷயம் இருப்பதை உணர்ந்ததால் தான் என்னால் அதிலிருந்து குணமடைய முடிந்தது.

வெளிப்புறத்தில் இருக்கும் பாதிப்பு, பிரச்னைகளை குணைப்படுத்துவதை காட்டிலும் உள் காயங்களுக்கே அதிக சிகிச்சை தேவை" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்