Samantha: தவறான தகவல் மூலம் ரசிகர்களை முட்டாள் ஆக்குகிறார் - சமந்தாவை ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய மருத்துவர்
போட்கேஸ்ட் மூலம் உடல் நலம் குறித்த தகவல் அளித்து வரும் சமந்தா, தவறான தகவலை அளித்திருப்பதாக மருத்துவர்கள் சாடியுள்ளனர். டேக் 20 என்ற பெயரில் கல்லீரலை நச்சுத்தன்மை ஆக்குவது பற்றி பேசியிருக்கும் சமந்தாவின் கருத்துக்கு ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயோசிடிஸ் என்ற தசை பலவீனம் அடையும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, நடிப்புக்கு தற்காலிக பிரேக் எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார், இந்த காலகட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டதோடு பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடல் மற்றும் மன அளவில் புத்துணர்வு பெற்ற நிலையில் மீண்டும் வழக்கம்போல் நடிக்க போவதாக சமீபத்தில் தெரிவித்தார்.
அத்துடன் மற்றொரு சர்ப்ரைஸ் விஷயமாக இன்ஸாட்வில் தனது தோழியுடன் இணைந்து ஹெல்த் போட்காஸ்டில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். அதன்படி தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு உடல் நலம் தொடர்பான டிப்ஸ்களை போட்கேஸ்ட் மூலம் வழங்கி வந்தார்.
சமந்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு
டேக் 20 என்ற தலைப்பில் தனது லேட்டஸ்ட் போட்காஸ்டில் கல்லீரல் நச்சுக்களை சுத்தப்படுத்துவது பற்றி தெரிவித்திருந்தார். இதற்கு பிரபல கல்லீரல் ஸ்பெஷலிஸ் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்லீரலை நச்சு நீக்குவது குறித்து தனது ரசிகர்களை தவறாக வழிநடத்தியதாக ஆட்சோபனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நீண்ட பதிவில் தனது அறியாமையை லட்சக்கணக்கான ரசிகர்களிடம் சமந்தா பகிர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பதிவில், "சினிமா நடிகையான சமந்தா, தனது 33 மில்லியனுக்கும் அதிகமான பலோயர்களிடம் கல்லீரல் நச்சு நீக்கம் தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்துள்ளார்.
அறிவியல் பற்றிய படிப்பறிவில்லாத இருவர் தங்கள் அறியாமையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கிய பயிற்சியாளர் வரும் நபர் உண்மையான மருத்துவ கிடையாது. எனவே அவருக்கு கல்லீரலின் செயல்பாடுகள் பற்றியும் தெரியாது.
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த மூலிகையாக டேன்டேலியன் மலர் இருப்பதாக சமந்தாவுடன் உரையாடும் நபர் கூறுகிறார். நான் ஒரு கல்லீரல் மருத்துவர், பயிற்சி பெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஹெபடாலஜிஸ்ட்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையளித்து வருகிறேன்.
டேன்டேலியனை சாலட்டில் பயன்படுத்தலாம். சிறுநீர் வெளியீட்டை அதிகரிக்கலாம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின்படி "டையூரிடிக்" அல்லது "தண்ணீர் மாத்திரை" போல வேலை செய்யலாம். ஆனால் இந்த விளைவுகளுக்கு சான்றுகளும் இல்லை.
சான்றுகள் அடிப்படையில் டேன்டேலியன் உணவு வயிற்றில் இருந்து வெளியேறி சிறுகுடலுக்குள் நுழையும் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை எளிதாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் அமைப்புகளில் வளர்க்கப்படும் டேன்டேலியன்களில் பூச்சிக்கொல்லிகள் ஆபத்து காரணமாக, காட்டு டேன்டேலியன்களை உட்கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவுக்கு குறிப்பு
இந்த பதிவுடன், சமந்தா குறிப்பு எடுத்துக்கொள்ளுமாறு கருத்துகளை பகிர்ந்திருக்கும் அந்த மருத்துவர், உடல் நலம் குறித்த படிப்பறிவு இல்லாத ரசிகர்கள் கூகுள் தேடல் மூலம் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும், கொடுக்கப்படும் இணைப்புகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என சாடியுள்ளார்.
சமந்தாவின் நடித்து வரும் படங்கள்
சமந்தா தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். தி பேமிலி மேன் வெப் சீரிஸைி இயக்கிய ராஜ் டிகே இந்த தொடரை இயக்குகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்