‘பணிவா இருக்குறது ரொம்ப கஷ்டம்..ட்ரை பண்றேன்.. மனிதனின் நரகமாக இருக்க விருப்பம்’ - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!
‘என்னை அறிவது என்பது என்னை நேசிப்பதாகும்; நான் ஒரு மனிதனின் நரகமாக இருக்க விரும்புகிறேன்; கடவுளே.. நான் பணிவாக இருப்பது மிக மிக கடினம்’ - சமந்தா
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் தன்னுடைய ரசிகர்களுக்கு சொல்ல தவறுவதே கிடையாது; அந்த வகையில் புத்தாண்டு பிறந்ததையொட்டி சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், ‘என்னை அறிவது என்பது என்னை நேசிப்பதாகும்; நான் ஒரு மனிதனின் நரகமாக இருக்க விரும்புகிறேன்; கடவுளே.. நான் பணிவாக இருப்பது மிக மிக கடினம்; ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
புத்தாண்டில் தேவாலயம் சென்ற சமந்தா
புத்தாண்டின் முதல் நாளன்று சமந்தா தேவாலயம் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்னதாக விடுமுறை நாட்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு சமந்தா, வருண்தவான் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சிட்டாடல் ஹனி பனி சீரிஸில் சமந்தாவின் ஆக்ஷன் அவதாரம் பெருமளவு கொண்டாடப்பட்டது. தற்போது சமந்தா கைவசம் இயக்குநர்கள் டிகே இயக்கும் Rakt Brahmand வெப் சீரிஸில் கமிட் ஆகி இருக்கிறார். அதே போல பங்காரம் படத்தில் நடிப்பதோடு, அந்தப்படத்தை தயாரித்து தெலுங்கில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
திருமண முறிவு
2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதற்கிடையே தசை அழற்சி நோயால் கடும் அவதிக்குள்ளான சமந்தா, சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று சிகிச்சைப்பெற்று வந்தார். தற்போது அவர் குணமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை மறைமுகமாக சாடும் வகையில் சமந்தா பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அவரது அப்பாவான ஜோசப் பிரபு காலமானார்.இப்படி தொடர்ச்சியாக துயரங்களை சந்தித்து வரும் சமந்தா, தனக்கு வரும் கஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவரிடம் சோசியல் மீடியா வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்