Samantha: சிக்குன்குன்யா பாதிப்பு.. தசை வலி தாங்க முடியல.. ஆனாலும் ஒர்க் அவுட் விட மாட்டேன் - சமந்தா மோட்டிவேஷன் விடியோ
Samantha Health: நீண்ட நாள்களுக்கு பிறகு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. பர்ப்பிள் நிற ஜிம் கிட் அணிந்து ஆழ்ந்த உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயினாக இருந்து வரும் சமந்தா, சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து மீண்டு வருவதாக கூறி ஒர்க் அவுட் செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தசை வலியுடன் சிக்குன்யாவிலிருந்து மீள்கிறேன்
சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சிறிய விடியோ கிளிப்பில் ஜிம்மில் கீழே அமர்ந்வாறு ஒர்க் அவுட் செய்கிறார். தனது முதுகை காட்டியவாறு உடற்பயிற்சி மேற்கொள்ளும் அவர் விடியோவில், "சிக்குன்குனியாவிலிருந்து மீள்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது, தசை வலி எல்லாம் அதிகமாக உள்ளது" கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். நீண்ட நாளுக்கு பிறகு ஒர்க அவுட் விடியோவை சமந்தா பகிர்ந்திருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிட்டாடல் ஷுட்டிங்கில் ஏற்பட்ட மூளையதிர்ச்சி
கடந்த நவம்பரில் சமந்தா நடிப்பில் வெளியான இந்தி வெப் சீரிஸ் சிட்டாடல்: ஹனி பன்னி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிட்டாடல் சீரிஸில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்த சமந்தா, ரெமான்ஸிலும் கலக்கியிருந்தார். இந்த சீரிஸில் சிறுவயது பெண் குழந்தைக்கு தாயாகவும் நடித்திருந்தார்.