‘எனக்கும் அம்மாவாக ஆசை இருக்கு.. ஆனால் காலம்.. உங்க வாழ்க்கையில நீங்க எப்ப வேணாலும்..’ - சமந்தா நெகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எனக்கும் அம்மாவாக ஆசை இருக்கு.. ஆனால் காலம்.. உங்க வாழ்க்கையில நீங்க எப்ப வேணாலும்..’ - சமந்தா நெகிழ்ச்சி!

‘எனக்கும் அம்மாவாக ஆசை இருக்கு.. ஆனால் காலம்.. உங்க வாழ்க்கையில நீங்க எப்ப வேணாலும்..’ - சமந்தா நெகிழ்ச்சி!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 11, 2024 05:08 PM IST

சமந்தா தனக்கு அம்மாவாக மாற வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அதற்கு ஒன்றும் காலதாமதம் ஆகிவிட வில்லை என்றும் பேசி இருக்கிறார்.

எனக்கும் அம்மாவாக ஆசை இருக்கு.. ஆனால் காலம்.. உங்க வாழ்க்கையில நீங்க எப்ப வேணாலும்..’ - சமந்தா நெகிழ்ச்சி!
எனக்கும் அம்மாவாக ஆசை இருக்கு.. ஆனால் காலம்.. உங்க வாழ்க்கையில நீங்க எப்ப வேணாலும்..’ - சமந்தா நெகிழ்ச்சி!

அண்மையில் சமந்தா, வருண்தவான் இணைந்து நடித்த  சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த சீரிஸில் சீக்ரெட் ஏஜண்டாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சமந்தா நடித்திருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்த சமந்தா, குழந்தைக்கு தாயாக நடித்தது குறித்தும், அதை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒப்பிட்டும் பேசி இருக்கிறார்.

அம்மாவாக மாற வேண்டும்

இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது ஒன்றும் அவ்வளவு காலதாமதமாகிவிட வில்லை. எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் எப்போதுமே ஒரு தாயாக மாற வேண்டும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறேன். அது மிகவும் அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் தாயாக மாற முடியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

 

 

மேலும் தற்போது சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி பேசிய சமந்தா, “ நான் தற்போது என்னுடைய வாழ்க்கையின் நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஆனால் நான் முன்பு ஒரு சாதரண நாளுக்காக இவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்ததில்லை. ஆனால் நான் தற்போது இருக்கிறேன்” என்று பேசினார். 

 

முன்னதாக ஒரு பேட்டியில், ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, ரிச்சட் மேடன் நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் தொடர் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது. அப்படி மக்கள் மனதுக்கு நெருக்கமான வெப் தொடரில் நானும் முக்கிய பங்களித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சமந்தா பேசி இருந்தார். 

பிரயங்கா சோப்ரா தான் ரோல் மாடல்

இது குறித்து பேசிய அவர், “நடிகை பிரியங்கா சோப்ரா, அனைத்து பெண்களுக்கும் சிறந்த ரோல் மாடலாக உள்ளார். பிரியங்கா சோப்ராவின் ஒவ்வொரு அடியும் நம்மை பெரிதளவில் சிந்திக்க வைக்கும் விதமாக அமைகிறது. பிரியங்கா சோப்ரா, அதிகாரமும் ஆளுமையும் நிறைந்தவராக இருப்பதுடன் அவருடன் பழகுவது அலாதி பிரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துகிறது.

நாம் திறமையனவர்களை சந்தித்து, அவர்களுடன் பழகும்போது, நமக்கான சவாலும் அதிகரிக்கிறது. அத்தகையவர்களின் நட்பு வாழ்க்கையில் கொஞ்ச காலம் கிடைத்தாலும் அது நம் வாழ்வில் நடக்கும் நன்மை” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.