Samantha: “ ‘செக்ஸி’ என்னோட இடம் கிடையாது.. விவாகரத்து முடிவுக்கு அப்புறமா வேண்டாம்னு சொன்னாங்க ஆனா” - சமந்தா!
“நான் என்னை எப்போதும் நான் போதுமான அளவு அழகாக இல்லை. நான் மற்றப் பெண்களை போல் இல்லை என்ற இடத்தில் இருந்தே பார்த்திருக்கிறேன். அந்தப்பாடலில் நான் ஆடும் போது பயந்து கொண்டே ஆடினேன். காரணம் செக்ஸியாக இருப்பது என்பது என்னுடைய செளகரியமான இடம் கிடையாது” - சமந்தா!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் எனும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அதிலிருந்து மீண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பான அனுபவங்களை அவர் தன்னுடைய யூடியூப் சேனலிலும் பகிர்ந்து வருகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினார். அந்தப்பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. சமந்தாவிற்கும் அந்தப்பாடல் வேறு மாதிரியான ரீச்சைக் கொடுத்தது. இந்த நிலையில் அந்தப்பாடலை பயந்து கொண்டே செய்ததாக பேசி இருக்கிறார். இது குறித்து இந்தியா டுடே செய்தி தளம் நடத்திய இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் அவர் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ஊ சொல்றியா பாடலில் ஆடவேண்டும் என்று என்ற முடிவு ஃபேமிலி மேன் படத்தில் இடம் பெற்ற ராஜி கதாபாத்திரைத்தை நான் செய்யலாம் என்ற முடிவை போன்றதே. உங்களைச் சுற்றி அதிக மனிதர்கள் இல்லாதது அவர்களின் கருத்துகள் உங்களுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
இந்தப்பக்கம் நல்லதாக இருந்த போதிலும், இதற்கு மறுபக்கம் என்ற ஒன்று இருக்கிறது. இந்தப்பக்கத்தின் மூலமாக நிகழும் தவறுகளில் இருந்தும், உள்ளுணர்வில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்தும் நான் பாடங்களை கற்றுக்கொள்கிறேன்.
ஒரு நடிகையாக இருக்கும் என்னுடைய அந்த முகத்தை ஆராயமுற்பட்டதே ஊ சொல்றியா பாடலில் நடனமாட வேண்டும் என்ற முடிவை என்னை எடுக்கவைத்தது. எப்போதுமே நான் என்னுடைய பெண் என்ற அடையாளத்தில் போதுமான அளவு செளகரியமாக இருந்ததில்லை.
நான் என்னை எப்போதும் நான் போதுமான அளவு அழகாக இல்லை. நான் மற்றப் பெண்களை போல் இல்லை என்ற இடத்தில் இருந்தே பார்த்திருக்கிறேன். அந்தப்பாடலில் நான் ஆடும் போது பயந்து கொண்டே ஆடினேன். காரணம் செக்ஸியாக இருப்பது என்பது என்னுடைய செளகரியமான இடம் கிடையாது.
ஆனால் ஒரு நடிகையாகவும், ஒரு மனிதராகவும் நான் எப்படி வளர்ந்தேன் என்றால், என்னை கடினமாக விஷயங்களில் ஈடுபடுத்தி, அதனுடன் போராடி, அதனை வென்று வெளியே வருவதின் மூலமாகவே…எப்படி இப்போது அசுரர்களை வதம் செய்கிறேனோ அப்படி...
ஊ சொல்றியா பாடலில் ஆடச்சொல்லி என்னை கேட்ட போது நான் விவாகரத்து தொடர்பான செயல்முறையில் பாதியில் இருந்தேன். அந்த முடிவு வெளியான பின்னர் என் குடும்பத்தினரும், என்னை ஆதரிப்பவர்களும், ஏன் என்னுடைய நண்பர்களும் கூட விவாகரத்து முடிவை அறிவித்த பின்னர், இப்படியான செக்ஸியான பாடலில் ஆட வேண்டாம். வீட்டில் உட்கார் என்றனர். ஆனால் நான் அந்தப்பாடலில் ஆட வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்