Samantha Vs Naga Chaitanya: நீ என்னடா என்ன வேணான்னு சொல்றது.. நீ எனக்கு வேணாம் - சைதன்யா டாட்டூவை நீக்கிய சமந்தா
நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவரின் பெயர் பொறித்த டாட்டூவை தனது உடலில் இருந்து நீக்கியுள்ளார்.
![நாகசைதன்யா பெயர் டாட்டூவை நீக்கிய சமந்தா? நாகசைதன்யா பெயர் டாட்டூவை நீக்கிய சமந்தா?](https://images.hindustantimes.com/tamil/img/2023/10/11/550x309/sam_1697021138063_1697021152331.png)
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி திரை நட்சத்திரமாகத் திகழ்பவர், நடிகை சமந்தா. கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஏ மாயா சேசவே' என்னும் படத்தில் நடிக்கும்போது, அப்படத்தில் நடித்த நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும், கடந்த 2017ஆம் ஆண்டு இருகுடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா, திருமணமானபின்பும் நடிப்பதில் பிஸியாக இருந்தார். குறிப்பாக, திருமணத்திற்குப் பின், ‘ரங்கஸ்தலம்’ என்னும் தெலுங்கு படத்தில் ராம்சரணுடன் ஒரு பாடல் காட்சியில் லிப் லாக் செய்வதுபோல் தோன்றினார். அதில் இருந்தே சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே மெல்ல மெல்ல கருத்துவேறுபாடுகள் வரத்தொடங்கியதாக அறியப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி, புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ எனும் பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து, படுகிளாமராக நடித்திருப்பார், சமந்தா. புஷ்பா படத்தில் கமிட் ஆனதில் இருந்து கருத்து மோதல் தீவிரமாகி, 2022ஆம் ஆண்டு தாங்கள் பிரிவதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர்.
இந்நிலையில் சமந்தா அதன்பின், மன அமைதிக்கு ஆன்மிக யாத்திரையாக ரிஷிகேஷ் வரை சென்றுவந்தார். இப்பிரிவு, சமந்தாவை மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதை அவரது ரசிகர்கள் உணர்ந்தனர்.
இதனிடையே தான் மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார், சமந்தா. பின் ஒரு வருட இடைவெளிக்குப் பின் உடல் நலம்பெற்று அண்மையில், அவர் சர்ப்ரைஸாக 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் பழனி முருகனை படிக்கட்டுகளில் ஏறிவந்து தரிசனம் செய்தார்.
சமீபத்தில் இவரும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்த குஷி திரைப்படம் ஓரளவுக்கு நன்கு ஓடியது.
இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நாக சைதன்யாவின் செல்லப்பெயரான சாயின் பெயர், அவரது வலது வயிற்றுப்பகுதியில் இல்லை. சாயின் டாட்டூ இல்லாதது குறித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சமந்தாவுக்கு மூன்று டாட்டூக்கள் குத்தியிருந்தார். ஒன்று முதுகில் இருக்கும் ஒய்எம்சி டாட்டூ. இது சமந்தாவும் நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'யே மாய சேசவே’யின்(YMC) முதலெழுத்துக்கள் ஆகும். இரண்டாவது Chay என்னும் நாகசைதன்யாவின் செல்லப்பெயரைக் குறிக்கும் டாட்டூ. மூன்றாவது டாட்டூ, அவரது வலது மணிக்கட்டில் உள்ளது. இது இரண்டு மேல்நோக்கிய அம்புகளின் சின்னமாகும். நாகசைதன்யா, தனது வலது மணிக்கட்டில் இதேபோன்ற பச்சை குத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்