அட்டாக் மோடில் சமந்தா.. இந்த மாதிரி காதல எங்கயும் பாக்க முடியாது! பற்ற வைத்த சமந்தா போஸ்ட்!
முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் திருமணம் குறித்து சமந்தா என்ன சொல்வார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவர் வெளியிட்ட ஒரே போஸ்ட் தற்போது இன்ஸ்டாகிராமை பற்ற வைத்துள்ளது.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் திருமணம் கடந்த 4ம் தேதி நடைபெற்ற நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் இணையம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரி வைரலாகி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
விருப்ப நாயகி
இந்திய மக்களின் விருப்ப நாயகியாக மாறி உள்ள சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர்.
இவர் மையோசிட்டீஸ் நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின் ஹிந்தி தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கு நடிகை சோபிதாவுடன் திருமணம் நடந்து முடிந்தது.
வைரலாகும் சமந்தா ஸ்டோரி
இந்த சமயத்தில் நடிகை சமந்தா, அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது செல்லப் பிராணி (நாய்) சாஷா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், இங்கு எந்தக் காதலும் சாஷாவின் காதலுக்கு காதலைப் போல இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் சமந்தா சோகமான முகத்துடன் இருப்பது போல் உள்ளது. இதையடுத்து அவர் சாஷாவுடன் விளையாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவு நிச்சயம் நாக சைதன்யாவைத் தான் குறிக்கிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் சைலண்டாக நாக சைதன்யாவின் காதலை விமர்சனம் செய்கிறார் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சமந்தாவின் பதிவு சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறி உள்ளது.
திருமண முறிவு
சமந்தா நடிகர் நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து விட்டனர். அந்த சமயத்தில் இருந்து சமந்தா பல துயர்களை சமந்தித்த போதும் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்
அதே சமயத்தில், அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் நிச்சயசதார்த்தம் முடிவடைந்த நிலையில், இன்று டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்டனர்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு, சமந்தா குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. அவருக்கு குழந்தை பெற்றுக் கொண்டு குடும்ப பெண்ணாக இருக்க எந்த விருப்பமும் இல்லை என பல தரப்பிலிருந்து வதந்திகள் பரவியது.
கம் பேக் கொடுத்த சமந்தா
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இதையடுத்து அவரது கம்பேக் ஆக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் அமைந்துள்ளது.
தனது படங்களில் அற்புதமான நடிப்பு, க்யூட் தோற்றத்தால் ரசிகர்களை கவரும் சமந்தா கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில், சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸில் ஆக்ஷன் ராணியாக அவதாரம் எடுத்திருப்பதோடு, கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் எந்த குறையும் இல்லாமல் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.