மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 15, 2025 12:05 PM IST

சமந்தா- நாக சைதன்யா வாழ்க்கையை மாற்றிப் போட்ட படமான ஏ மாயா சேசாவே படம் ரீ -ரிலீஸ் செய்யப்படுவதாக கூறி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

கௌதம் மேனனின் மேஜிக்

இந்தப் படம் தான் சினிமா உலகில் சமந்தாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. அத்தோடு நில்லாமல், தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவிற்கு ஒரு லவ்வர் பாய் இமேஜும் கிடைக்க காரணமாக அமைந்தது. இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்தது.

15 ஆண்டுக்கு பிறகு

இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் எல்லாம் கொண்டாடி வந்தனர். தமிழில் 15 ஆம் ஆண்டை முன்னிட்டு ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட படம் 100 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ரடிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தெலுங்கில் ஏ மாயா சேசாவே படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரிலீஸ்?

சமந்தா- நாக சைதன்யா கூட்டணியில் ரசிகர்களை கவர்ந்த இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. இணையத்தில் வெளியான தகவல்களின் படி இந்தப் படம், வரும் ஜூலை 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், இப்படம் குறித்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இதற்கிடையில், இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெகு விமர்சையாக வெளியிட வேண்டும் என்றும், இதற்கான விளம்பரப் பணிகளில் சமந்தாவும் சைதன்யாவும் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமந்தாவின் ஸ்பெஷல் படம்

சமந்தா திரையுலகில் அறிமுகமான முதல் படம் மற்றும் அவருக்கு இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலானது என்றும் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அத்துடன், ஏ மாயா சேசாவே படத்தின் ஒவ்வொரு சீனும் தனக்கு நியாபகம் இருப்பதாக கூறி வந்தார். இந்நிலையில், அவர் இந்தப் படத்தின் புரொமோஷனுக்கு வருவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. அதே சமயம் நாக சைதன்யா இது குறித்த புரொமோஷன்களில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காதலும் விவாகரத்தும்

தனது முதல் படமான 'ஏ மாயா சேசாவே'வில் இணைந்து நடித்த நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் மனம் ஒத்து பிரிந்து விவாகரத்து பெற்றனர். தற்போது சமந்தா சிங்கிளாக இருக்க நாக சைதன்யா கடந்த ஆண்டு ஷோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.