தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Samantha Latest Interview About The Sufferingof Imposter Syndrome And The Mental Pains Caused By It

Samantha: ‘5 மணி நேர தூக்கம்.. தேவைக்கு அதிகமாவே.. தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க..’ - சமந்தா கண்ணீர்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 18, 2024 03:51 PM IST

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போதுதான் தோற்றுவிடக்கூடாது என்ற பயம்தான் என்னை உந்தித்தள்ளி வெற்றிகளை பெற வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதே நேரம் அது என்னை அழிக்கவும் செய்திருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது முதலில் இது ஏன் எனக்கு நடந்தது என்று கேட்டேன்.

சமந்தா!
சமந்தா!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் அவர் அண்மையில் இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, “தோல்வியின் மீது இருந்த பயம்தான் என்னை நீண்ட காலம் ஓட வைத்திருக்கிறது. என்னுடைய இந்த 14 வருட திரை பயணத்தில் பயம்தான் எனக்கு உந்து சக்தியாக இருந்து இருக்கிறது. 

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போதுதான் தோற்றுவிடக்கூடாது என்ற பயம்தான் என்னை உந்தித்தள்ளி வெற்றிகளை பெற வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதே நேரம் அது என்னை அழிக்கவும் செய்திருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது முதலில் இது ஏன் எனக்கு நடந்தது என்று கேட்டேன்.

ஆனால் இதனை சரிசெய்ய எடுத்துக்கொண்ட இந்த ஒன்றைரை வருடத்தில், அதை எதிர்கொள்வதை விட எனக்கு வேறு வழியில்லை என்று தோன்றியது. நான் ஒரே நேரத்தில் 10 விஷயங்களை செய்து கொண்டிருந்தேன். 5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். யாராவது 7 மணி நேரம் தூங்கினால் அவர்களை ஏன் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறீர்கள் என்று சொல்வேன்.

இந்த பரபரப்பான கலாச்சாரம் தூக்கம் என்பது நமது உடலுக்கு எரிபொருள் தருகிறது என்பதை மறந்து விட்டது. நானும் அதனை மறந்து விட்டேன். அதனை தேவைக்கு அதிகமாக எடுத்து பயன்படுத்தி விட்டேன். 

நான் என்னுடைய உடலுக்கும் மனைதிற்கும் ஓய்வை கொடுக்கவே வில்லை. இந்த பயணத்தில் என்னுடைய பெரும்பான்மையான படங்கள் பிளாக் பஸ்டர்களாவே இருந்து இருக்கின்றன. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் மகிழ்ச்சியாகவே இல்லை. காரணம் நான் அப்போதே imposter syndrome நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். அதனால் என்னுடைய வெற்றிகளை என்னால் கொண்டாட முடியவில்லை” என்று பேசினார்.

முன்னதாக, ஊ சொல்றியா பாடலில் நடிக்க ஏன் சம்மதித்தேன் என்பது குறித்து அவர் பேசி இருந்தார். 

அது குறித்து அவர் பேசும் போது, “ஊ சொல்றியா பாடலில் ஆடவேண்டும் என்று என்ற முடிவு ஃபேமிலி மேன் படத்தில் இடம் பெற்ற ராஜி கதாபாத்திரைத்தை நான் செய்யலாம் என்ற முடிவை போன்றதே. உங்களைச் சுற்றி அதிக மனிதர்கள் இல்லாதது அவர்களின் கருத்துகள் உங்களுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

இந்தப்பக்கம் நல்லதாக இருந்த போதிலும், இதற்கு மறுபக்கம் என்ற ஒன்று இருக்கிறது. இந்தப்பக்கத்தின் மூலமாக நிகழும் தவறுகளில் இருந்தும், உள்ளுணர்வில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்தும் நான் பாடங்களை கற்றுக்கொள்கிறேன்.

ஒரு நடிகையாக இருக்கும் என்னுடைய அந்த முகத்தை ஆராயமுற்பட்டதே ஊ சொல்றியா பாடலில் நடனமாட வேண்டும் என்ற முடிவை என்னை எடுக்கவைத்தது. எப்போதுமே நான் என்னுடைய பெண் என்ற அடையாளத்தில் போதுமான அளவு செளகரியமாக இருந்ததில்லை.

நான் என்னை எப்போதும் நான் போதுமான அளவு அழகாக இல்லை. நான் மற்றப் பெண்களை போல் இல்லை என்ற இடத்தில் இருந்தே பார்த்திருக்கிறேன். அந்தப்பாடலில் நான் ஆடும் போது பயந்து கொண்டே ஆடினேன். காரணம் செக்ஸியாக இருப்பது என்பது என்னுடைய செளகரியமான இடம் கிடையாது.

ஆனால் ஒரு நடிகையாகவும், ஒரு மனிதராகவும் நான் எப்படி வளர்ந்தேன் என்றால், என்னை கடினமாக விஷயங்களில் ஈடுபடுத்தி, அதனுடன் போராடி, அதனை வென்று வெளியே வருவதின் மூலமாகவே…எப்படி இப்போது அசுரர்களை வதம் செய்கிறேனோ அப்படி...

ஊ சொல்றியா பாடலில் ஆடச்சொல்லி என்னை கேட்ட போது நான் விவாகரத்து தொடர்பான செயல்முறையில் பாதியில் இருந்தேன். அந்த முடிவு வெளியான பின்னர் என் குடும்பத்தினரும், என்னை ஆதரிப்பவர்களும், ஏன் என்னுடைய நண்பர்களும் கூட விவாகரத்து முடிவை அறிவித்த பின்னர், இப்படியான செக்ஸியான பாடலில் ஆட வேண்டாம். வீட்டில் உட்கார் என்றனர். ஆனால் நான் அந்தப்பாடலில் ஆட வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்