தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: ஐஎம்டிபி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நட்சத்திரங்களில் டாப் 15க்குள் வந்த ஒரே தென்னிந்திய நடிகை சமந்தா

Samantha: ஐஎம்டிபி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நட்சத்திரங்களில் டாப் 15க்குள் வந்த ஒரே தென்னிந்திய நடிகை சமந்தா

Marimuthu M HT Tamil
May 29, 2024 09:13 PM IST

Samantha: ஐஎம்டிபி தளத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் பார்க்கப்பட்ட 100 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் டாப் 15 பட்டியலில் வந்த ஒரே தென்னிந்திய நடிகையாக சமந்தா இடம்பெற்றுள்ளார்.

ஐஎம்டிபி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நட்சத்திரங்களில் டாப் 15க்குள் வந்த ஒரே தென்னிந்திய நடிகை சமந்தா
ஐஎம்டிபி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நட்சத்திரங்களில் டாப் 15க்குள் வந்த ஒரே தென்னிந்திய நடிகை சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2024 வரையிலான ஐஎம்டிபியின் பட்டியல் ஆனது, வாராந்திர தரவரிசையில் தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பிடித்த இந்திய நட்சத்திரங்களின் அடிப்படையில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசைகள் உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வையாளர்களின் பட்டியலின் அடிப்படையில், ஐஎம்டிபி இந்த தரவரிசையை வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக திரைத்துறை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, சமந்தாவிடம் இருந்து பெற்ற தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செய்திக் குறிப்பில் சமந்தா, ‘’எனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முயற்சிகள் மற்றும் ரசிகர்கள் என்னிடம் காட்டிய நம்பமுடியாத அன்பு மற்றும் நம்பிக்கையின் கூட்டுத்தொகை தான் இந்த இடம். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த கௌரவத்திற்காக IMDB-க்கு நன்றி’’ தெரிவித்துள்ளார். 

IMDb பட்டியலில் உள்ள பிற தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகைகள் பட்டியல்:

ஐஎம்டிபி பட்டியலில், நடிகை சமந்தா 13ஆவது இடத்திலும், நடிகைகள் கரீனா கபூர் கான் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் முறையே 14 மற்றும் 15ஆவது இடத்திலும் உள்ளனர். 16ஆவது இடத்தில் தமன்னாவும், 18ஆவது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர். 

தவிர, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுன், மோகன்லால், மாதவன், ஸ்ரேயா சரண், கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், துல்கர் சல்மான், மம்மூட்டி, பூஜா ஹெக்டே, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், த்ரிஷா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, யாஷ், விக்ரம், அஜித் குமார் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் ஐஎம்டிபி பட்டியலில் உள்ளனர். 

முதல் ஐந்து இடங்கள் யாருக்கு?

கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 100 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் தீபிகா படுகோனேவும், இரண்டாம் இடத்தில் ஷாருக்கானும், மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராயும், நான்காம் இடத்தில் ஆலியா பட்டும் மற்றும் ஐந்தாம் இடத்தில் இர்ஃபான் கானும் உள்ளனர். 

சமந்தாவின் வரவிருக்கும் படைப்புகள்:

சமந்தா கடைசியாக 2023ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ’குஷி’ படத்தில் நடித்தார். நடிகை சமந்தா,  மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் பாட்காஸ்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமந்தா, ராஜ் & டிகேவின் வலைத் தொடரான சிட்டாடல்: ஹனி பன்னியில், வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். அது விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்த வலைத்தொடர், அமேசான் பிரைம் வீடியோ தொடரில் பிரியங்கா சோப்ரா மற்றும் ஜோஷ் அப்பெல்பாமின் நடித்த அமெரிக்க தொடரின் இந்திய பதிப்பாகும்.

நடிகை சமந்தா, டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். மேலும் அதன் முதல் படமான பங்காரத்திலும் நடிக்கவுள்ளார்.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்