ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்த சமந்தா.. ராஷ்மிகா மன்னிப்பு! விவாகரத்தை அறிவத்த நடிகர் - இன்றயை டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: விவசாய ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்த சமந்தா, ரசிகர்களிடம் ராஷ்மிகா மன்னிப்பு, விவாகரத்தை அறிவத்த நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் என இன்றைய டாப் சினிமா செய்திகள் எவை என்பதை பார்க்கலாம்
அல்லு அர்ஜுனை கைது செய்ய வேண்டும் என கூறி #alluarjunarrested என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. புஷ்பா 2 ப்ரிவியூ ஷோ பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் தற்போது தெலுங்கு திரையுலகில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அல்லு அர்ஜுன் வீட்டில் கல் வீசி தாக்குதல்
புஷ்பா 2 ப்ரிவியூ ஷோ பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர் சங்கத்தினர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அவரது உருவ பொம்மை எரிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
விவசாய ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்த சமந்தா
ஹைதராபாத்தை சேர்ந்த அர்பன் கிஷான் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் நடிகை சமந்தா. இந்த நிறுவனம் மண் இல்லாமல் காய்கறிகளை விளைவித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை பயன்படுத்தி உணவு பொருள்களை விளைவித்து வருகிறார்கள்.
செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் படம் பூஜையுடன் தொடக்கம்
செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் மென்டல் மனதில் என்ற படம் உருவாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. யுனிவர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மாதுரி ஜெயின் ஹீரோயினாக நடிக்கிறார்
அமெரிக்க முன்னாள் அதிபரை கவர்ந்த இந்திய படம்
கேனஸ் திரைப்படவிழாவில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம், 2024இல் தன்னை கவர்ந்த படங்களின் லிஸ்டில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஓபாமா பதிவிட்டுள்ளார். இந்த படம் கேனஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.
விஜய் படம் பற்றி பேசி ராஷ்மிகா மன்னிப்பு
விஜய், மகேஷ் பாபு படம் பற்றி தவறான தகவலை பேசிய ராஷ்மிகா ரசிகர்கள் ட்ரோல் செய்த நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் விஜய் நடித்த கில்லி, போக்ரி படத்தின் ரீமேக் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் நிஜத்தில் கில்லி, தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக். ராஷ்மிகாவின் இந்த தவறான பேச்சை ரசிகர்கள் கலாய்த்த நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மனைவியிடம் விவாகரத்து பெற்றதை அறிவித்த சீரியல் நடிகர்
செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன் என மனைவியிடம் விவாகரத்து பெற்றது குறித்து டிவி நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த விவகாரத்தில் தன்னை துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ போலீசில் புகாரும் அளித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஈஸ்வர், மனைவி ஜெயஸ்ரீயிடமிருந்து விவகாரத்து கோரியிருந்தார். நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்து இந்த வழக்கில் தற்போது விவாகரத்து கிடைத்திருப்பதாக ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கல்
புஷ்பா 2 பட விவகாரத்தில் தொடர்ந்து அல்லு அர்ஜூன் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் வசூல் குறைந்து வருகிறது. Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 17வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 1198.3 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நல்ல ஓபனிங்கை பெற்ற விடுதலை 2
மிக பெரிய எதிர்பார்ப்புக்ுக மத்தியில் வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.7 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இரண்டு நாளில் ரூ. 15.72 கோடி வரை வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது
சலார் 2 என சினிமா வாழ்க்கியில் சிறந்த கதையாக இருக்கும் - பிரசாந்த் நீல் பேச்சு
பிரபாஸின் சலார் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையிலேயே நான் எழுதிய சிறந்த கதையாக இருக்கும் என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.
சலார் படம் வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், கைராம் வாஷிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது படங்கள் குறித்த பல தகவல்களை அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், "சாலார் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக இருந்தாலும் அது எனக்கு ஏமாற்றத்தை தான் அளித்தது. அந்தப் படத்தில் நிறைய கடின உழைப்பை வழங்கி இருந்ததால், இன்னும் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கலாம். அதனால், சலார் முதல் பாகத்தால் நான் முழுமையான சந்தோஷத்தை அடைய முடியவில்லை. கே.ஜி.எஃப் 2 கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தை சரியாக எடுக்காமல் விட்டுவிட்டேனோ என்ற சந்தேகம் அடிக்கடி என்னுள் எழுகிறது.
இதனால் சலார் 2 படத்தை எனது சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளேன். படத்தில் நான் எழுதிய கதைகளும் வசனங்கலும் அனேகமாக எனது சிறந்த படைப்பில் ஒன்றாக இருக்கும். நான் கற்பனை செய்வதை விடவும், பார்வையாளர்கள் கற்பனை செய்வதை விடவும் நான் அதை பெரிதாக உருவாக்கப் போகிறேன். இது சந்தேகத்திற்கு இடமின்றி எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறினார்.
அட்லியை கலாய்த்த கீர்த்தி சுரேஷ்
பேபி ஜான் படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ், வருண் தவான், அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோர் துபாய் சென்றனர். அங்கு பிரியாவும் கீர்த்தி சுரேஷும் போட்டோக்கு போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கையில் அட்லியோ போட்டோ எடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்துள்ளார். ஆனால், இதை அவருக்கே தெரியாமல் வருண் தவான் விடியோ எடுத்து வந்தார்.
விடியோ எடுத்தது மட்டுமின்றி, சார் நீங்க எவ்ளோ பெரிய டைரக்டர். ஆனா நீங்க இப்படி போட்டோகிராஃபர் ஆகிட்டிங்களே என கிண்டலாக கேட்டார். அப்போது அட்லி இது எல்லாம் வாழ்க்கை பாடம் சார் (life lessons) என கூற, வேண்டும் என்றே வருண் தவான் மனைவி கற்றுக் கொடுத்த பாடமா (wifes lessons) என கிண்டலாக கேட்டார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பிரியாவும் கீர்த்தி சுரேஷும் போட்டோவைப் பார்க்க வந்தால், அட்லி போட்டோவிற்கு பதில் வீடியோ எடுத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது, கீர்த்தி என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினார். அதையும் சேர்த்து வருண் தவான் வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.