Tamil News  /  Entertainment  /  Samantha In Home Now And Taking Rest, Spokesperson Clears Hospitalised Rumour
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு வீட்டில் ஓய்வில் இருப்பதாக நடிகை சமந்தாதரப்பு விளக்கம் அளித்துள்ளது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு வீட்டில் ஓய்வில் இருப்பதாக நடிகை சமந்தாதரப்பு விளக்கம் அளித்துள்ளது

Samantha hospitalised: ஓய்வில் உள்ளார் சமந்தா! மருத்துவமனை வதந்திக்கு விளக்கம்

24 November 2022, 10:32 ISTMuthu Vinayagam Kosalairaman
24 November 2022, 10:32 IST

சமந்தா வீட்டில் ஓய்வில் உள்ளார், என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாக தகவல்களுக்கு அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் இருப்பதாக உலா வரும் வதந்திகளுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழும் சமந்தா மயோசிடிஸ் என்னும் அரிய வகை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான யசோதா பட புரொமோஷனில் கலந்து கொண்ட சமந்தா தனது உடல்நிலை குறித்து மிகவும் உணர்வுபூர்வமாக பேசினார். அத்துடன் தற்போது சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஹைதரபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமனை நடிகை சமந்தா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு சமந்தா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

சமந்தா தற்போது ஹைதபாத்தில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அவர் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உலா வரும் தகவல்கள் வதந்தியே எனவும் கூறப்பட்டுள்ளது.

சமந்தாவின் யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அள்ளியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தா குஷி என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள சகுந்தலம் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

டாபிக்ஸ்